அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தொடரும் மணல் கொள்ளை ! அதிரடி காட்டும் ஐ.ஜி!

திருச்சியில் அடகு நகையை விற்க

9 திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் மணல் கொள்ளையை தடுக்கும்பொருட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப அறிவுறுத்தலின்படி மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் 2026 ஆண்டு மணல் திருட்டு சம்பந்தமாக மத்திய மண்டலத்தில் மொத்தம் 147 வழக்குகள் (திருச்சி 24, புதுக்கோட்டை 29, கரூர் 8, பெரம்பலூர் 13, அரியலூர் 23, தஞ்சாவூர் 44, திருவாரூர் 3, நாகப்பட்டிணம் 2 மற்றும் மயிலாடுதுறை 1) பதியப்பட்டுள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வே. பாலகிருஷ்ணன்
வே. பாலகிருஷ்ணன்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மணல் திருட்டு வழக்குகளில் சம்பந்தபட்டுள்ள எதிரிகளில் திருச்சி 53 நபர்கள், புதுக்கோட்டை 24 நபர்கள், கரூர் 1 நபர், பெரம்பலூர் 8 நபர்கள், அரியலூர் 28 நபர்கள், தஞ்சாவூர் 35 நபர்கள், திருவாரூர் 2 நபர்கள் மற்றும் நாகப்பட்டிணம் 1 நபர் என மொத்தம் 152 எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 209 வாகனங்கள் முறையே திருச்சி 44. புதுக்கோட்டை 54, கரூர் 11, பெரம்பலூர் 17, அரியலூர் 34, தஞ்சாவூர் 45, திருவாரூர் 2, நாகப்பட்டிணம் 1 மற்றும் மயிலாடுதுறை 1 என பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
9 மாவட்டங்களில் மத்திய மண்டல காவல்துறைக்கு காவல்துறையினர், வருவாய்துறையினர், கனிமவளத்துறையினர் இரவு பகல் எல்லா நேரங்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தல் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், மணல் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டபடியான கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு, மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.