வருகிறாள் சாஃப்ட்வேர் ‘சண்டக்காரி’
‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதைக்கு ஆர். மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘சண்டக்காரி’.
லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ‘சிவாஜி’ படப் புகழ் ஸ்ரேயா, அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடித்துள்ளார். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளார்.

அதிகாரி – ஊழியர் என இருவரும் எதிரெதிர் துருவங்களில் இருக்கும் நிலையில், இவர்களுக்கு இடையே உருவாகும் சம்பவங்களும், மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும் கதையை சுவாரஸ்யமான பாதையில் நகர்த்துகின்றன.
‘புன்னகைப்பூ’ கீதா தயாரித்துள்ள இப்படத்தில் பிரபு , சத்யன், கே.ஆர். விஜயா, ‘புன்னகைப் பூ’ கீதா, ‘கடலோரக் கவிதைகள் ‘ரேகா, உமா பத்மநாபன்,கிரேன் மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
விரைவில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறாள் இந்த சாஃப்ட்வேர் ‘சண்டக்காரி’.
— மோனிஷா






Comments are closed, but trackbacks and pingbacks are open.