ஜெயிலில் இருந்து கோர்ட்டில் ஆஜரான சவுக்கு சங்கர் ! கஞ்சா வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஓட்டல் ஒன்றில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கர் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு 2 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட நிலையில்,   டிச-20 அன்று மீண்டும் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜரான சவுக்கு சங்கர்
கோர்ட்டில் ஆஜரான சவுக்கு சங்கர்

Sri Kumaran Mini HAll Trichy

கஞ்சா வைத்திருந்த வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார்.  பின்னர் நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதனைத் தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்து தனக்கு ஜாமின் வழங்கவேண்டும் என சவுக்குசங்கர் கோரிய வழக்கில், மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டிருக்கிறார். பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

 

 —  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.