பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஆலோசனைக் கூட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துறையூரில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஆலோசனைக் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பள்ளி செல்லா மற்றும் இடைநிற்றல் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தொடர்ந்து கல்வி பயில வழிவகை செய்வதற்கான மூன்றாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டமன்றத்தில் நடைபெற்றது.
துறையூர் வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முசிறி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அப்போது துறையூர் வட்டாரத்தில் உள்ள 392 பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார் .மேலும் பல்வேறு காரணங்களாலும் ,குடும்ப சூழ்நிலை காரணங்களாலும் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து கல்வியில் எதிர்கால சமுதாயத்தை சிறப்பாக உருவாக்க ஆசிரியர்களாகிய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசினார்.

மேலும் கூட்டத்தில் காவல்துறை, மருத்துவத்துறை ,வருவாய்த்துறை உள்ளிட்ட துறையினை சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் துறையூர் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் அமரகவிநாதன், வீரமச்சான்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் பிரபாகரன், துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் மற்றும் கோவிந்தாபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ரோஸ்லின் சுகுணா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

-ஜோஸ்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.