அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஒரே பள்ளி,ஒரே பாடம் – சம்பளம் மட்டும் ஒருவருக்கு 50,000 இன்னொருவருக்கு 10,000 ! இது தான் சமூகநீதியா ?

ஒரே பள்ளியில் ஒரே பாடத்தைக் கற்பிக்க நிரந்தர சம்பளமாக 50,000க்கும் அதிகமாகப் பெறும் ஆசிரியர்கள் ஒரு புறம் ... மற்றொரு புறம் 10,000..

5

திருச்சியில் அடகு நகையை விற்க

பத்தாயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் !

தரமான கல்விக்கு வழிவகை செய்யுங்கள் அமைச்சரே!

 

தற்காலிகமா பத்தாயிரம் ரூபாய்க்கு முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக நியமிக்கக் கூறுகின்றது கல்வித் துறை.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

நடப்பு கல்வியாண்டில் ஜூன் முதல் நவம்பர் வரை ஓடிவிட்டது. ஆறு மாதங்கள் ஆசிரியர்கள் இல்லாமலேயே மாணவர்களது கற்றல் நிகழ்ந்துள்ளது. இந்த 2774 என்ற எண்ணிக்கை கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையை வைத்து தான் இருக்கும். இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கையை இனிமேல் தான் கணக்கு எடுப்பார்கள் , அடுத்த வருடம் ஒரு வேளை இது குறித்து ஆசிரியர் நியமனம் பேசப்படலாம்.

அரசுப் பள்ளிகளில் இது தான் அடிப்படையாகப் பார்க்க வேண்டிய பிரச்சனை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்கள் இல்லாமல் #Adjustment பண்ணும் சூழல் தான்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

தற்போதைய அரசு அமைந்து 6 மாதங்கள் முடிந்து 20 நாட்கள் ஆயிற்று. கல்வித் துறையை மிக அவசரமாக சரி செய்ய வேண்டி இருப்பது குறித்து ஏற்கனவே எதிர்க்கட்சியாக இவர்கள் இருக்கும் போது திட்டமிட்டு இருப்பது அவசியம். ஜூன் மாதமே ஆசிரியர்களை நியமித்து இருக்க வேண்டும் , ஆனால் செய்யவில்லை.

தனியார் பள்ளிகள் டிசம்பர் மாதத்திற்குள் பாடப் பகுதிகளை நடத்தி திருப்புதல் நடத்தி விடுவர். அரசுப் பள்ளிகளிலும் அது நடக்கிறது , ஆனால் பழைய மாணவர்களுக்கே 2774 ஆசிரியர்கள் இல்லாமல் , புதிய மாணவரும் சேர்த்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் #Somehow_manage செய்து தான் ஓடிக் கொண்டிருக்கும் .

கல்வி அமைச்சர் , பொதுத் தேர்வு +2 மாணவர்களுக்கு உண்டு என்று கூறியதை ஊடக செய்தியில் நாம் பார்த்திருப்போம். எனில் நமது அரசுப் பள்ளிக் குழந்தைகள் முதுகலை ஆசிரியர்களே இல்லாமல் எப்படிப் படிக்கின்றனர் என்ற கேள்வி எழ வேண்டாமா ? அது மட்டுமா அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதில்லை , போட்டித் தேர்வுகளில் ஈடுபடுவதில் பிரச்சனை என எத்தனைக் கருத்துகளை சந்திக்கிறோம் ?ஆசிரியர்களே இல்லாமல் அல்லவா பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர் ?

தற்போது ஆசிரியரே இல்லாத சூழலைத் தவிர்க்கவே இப்படியான அறிவிப்பு செய்துள்ளனர் என நம்ப முடிகிறது. ஆனால் இது நிரந்தரத் தீர்வாகுமா ?

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு நியமனம் ஆகும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு கல்வியைத் தருவார்கள் என்பதை யோசிக்க வேண்டும். எத்தனையோ தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கத்தானே செய்கின்றனர். ஏன் நியமிப்பதில் பிரச்சனை எனப் புரியவில்லை ?

செப்டம்பர் மாதம் PG TRB க்காக விண்ணப்பிக்கக் கூறி அது ஒரு புறம் நடக்கின்ற வேளையில் திடீரென தற்காலிக 10,000 ரூபாய் சம்பள ஆசிரியர்கள் நியமனம் நம்மை அச்சமுற வைக்கிறது. ஒரே பள்ளியில் ஒரே பாடத்தைக் கற்பிக்க நிரந்தர சம்பளமாக 50,000க்கும் அதிகமாகப் பெறும் ஆசிரியர்கள் ஒரு புறம் … மற்றொரு புறம் 10,000 அதாவது ஐந்தில் ஒரு பங்கு சம்பளம் பெறும் தற்காலிக ஆசிரியர்கள் ஒரு புறம் ? இது தான் சமூக நீதியா ?

போர்க்கால அடிப்படையில் எத்தனையோ துறைகளில் மாற்றம் கொண்டு வரும் நமக்கு கல்வித் துறையை எதனால் ஆறப் போடுகின்றோம் என புரியவில்லை. நிதி பிரச்சனை என்றாலும் கல்விக்கான முதலீட்டை செலவாகப் பார்ப்பது நியாயமா ?

ஏற்கனவே இங்கு பணக்காரர்களுக்கு ஒரு கல்வி , ஏழைக்கு ஒரு கல்வி … தற்போது அந்த ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குள் வேறுபாடான கற்பித்தல் ஆசிரியர்களா ?

அதே போல கடந்த பத்தாண்டுகளாக பள்ளிகளில் PTA (பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் ) வை விட SMC (School Management Committee) , SMDC( School Management Development committee) பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தான் முக்கியத்துவம் பெற்று வருகின்றன கல்வி உரிமைச் சட்டத்தின் படி …. எனில் இந்த ஆசிரியர் நியமனங்கள் PTA வழியே எப்படி என நமக்கு கேள்விகள் எழுகின்றன.

முதுகலை ஆசிரியர் சங்கங்கள் இவற்றில் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளன என்பதும் தெரியவில்லை. எது எப்படியோ முறையாக நிரந்தர ஆசிரியர்களை அரசுப் பள்ளியில் நியமித்து தரமான கல்வியைக் குழந்தைகளுக்கு வழங்குங்கள்

கல்வி அமைச்சர் #AnbilMaheshPoyyamozhi அவர்கள் கவனத்திற்கு

உமா மகேஷ்வரி,

அரசுப்பள்ளி ஆசிரியை,

கல்வி செயற்பாட்டாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

5 Comments
  1. நூர் says

    முறையாக வந்தவர்களுக்கும் குறுக்கு வழியில் நுழைபவர்க்கும் வித்தியாசம் இல்லையா?

  2. நூர் says

    எத்தனையோ TET முடித்தவர்கள் வருடக்கணக்கில் காத்திருக்கின்றனர். அவர்களை இந்த அரசு வஞ்சிக்கிறது. கலைஞருக்கு நிகர் அவரே.. அவர் ஆசிரியர்களை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தார்.

  3. நூர் says

    ஆசிரியர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

  4. P David Raj says

    10000 இல்லீங்க 4000 , 5000 தான்

  5. Rajarajeswari says

    தமிழ் நாட்ல ஆசிரியர் வேலை என்பதே கனவாகி விட்டது இனி யார் சரியாக ஆசிரியர்களை நியமிக்கிரார்களோ அவர்களே ஆட்சிக்கு வர முடியும் ஏன்னா ஆசிரியர்களின் வாக்குகளே அதிகம் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.