என் கட்சியில் இணைவதை தடுக்கவே மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது – சிரிப்பு அரசியல்வாதி ச்சீமான் பொளேர் !
என் கட்சியில் இணைவதை தடுக்கவே மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது சிரிப்பு அரசியல்வாதி – ச்சீமான் பொளேர் !தமிழகத்தின் அதிபராக தன்னை நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் சீமான் இன்னும் ஒருபடி முன்னேறி, “நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர். நாளடைவில் அதுவே முருகனாக மாறியது” என்று உருட்டி
வலுக்கட்டாயமாக குட்டி ஸ்டோரி சொல்லி தம்பிகளை திணற வைக்க ஆமை கதைல இருந்து யானைக் கதை வரைக்கும் பல கதைகளைக் கேட்டு நம்ம காதுல ரத்தம் வந்திருக்கும். அந்தக் கதையெல்லாம் கேக்கும்போது அண்ணன்கிட்ட ‘அண்ணே பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்குல எல்லாம் பேசக்கூடாது.
கொஞ்சமாவது நியாயமா பேசணும்ணே’னு சொல்லத் தோணும். இலங்கை தொடர்பான பல கதைகள் நமக்கு ரொம்பவே அண்ணன் மூலம் பரிச்சயமானதுதான். ஆனால், அதையும்தாண்டி ஒரு கதையை அண்ணன் அரூரில் அவிழ்த்து விட்டுருக்கிறார். அந்த வகையில், அண்ணன் சொன்ன தரமான கதை தொடங்கி திமுகவினரை எரிச்சலடைய வைத்த வரை பார்ப்போம்.
“அலுவல் வேளையாக கடந்த 9 ந்தேதி அரூர் வழியாக சேலம் போயிட்டு மீண்டும் அதே வழித்தடத்தில் இரவு 7 மணியளவில் திரும்பி கொண்டு இருந்தோம் , அப்போது , தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் சிலை எதிரே புஹாஹாஹா…. என சிரிப்பு வெடி சத்தம் கேட்டது , எதிரொலியாக ஊய்ய் ஊய்ய் உய்ய்… என்று சத்தங்கள் காதை பிளந்தது நெருங்கும் போதுதான் தெரிந்தது நம்ம அதிபர் சீமான்னா உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கூடத்தில் பேசி கொண்டு இருந்தார்.
நாமும் அந்த கூட்டத்தில் புகுந்து ஓரத்தில் அமரந்து கொண்டோம் சுற்றிருந்த தம்பிகள் ஏற இறங்க பார்த்தனர் , அப்பதான் ஹை டெசிபலில் தம்பிகள்து காதுகள் கிழியும் வண்ணம் உருட்டிக் கொண்டிருந்தார்.
சீமான் மேடைகளில் சொல்லும் கதைகள் நாம் தமிழர் தம்பிகள் மத்தியில் ரொம்பவே பிரபலம். இலங்கை சென்று வந்த கதைகள், ஆமைக்கறி சாப்பிட்ட கதை போன்றவை சமூகவலைதளங்களில் ட்ரோல் வீடியோ உருவாக்குபவர்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள் போன்றோருக்கு கண்டண்ட் மெட்ரீயலாக அது இருக்கும் அண்ணன் ஆரம்பத்திலே கதை சொல்ல ஆயத்தமானார்
” இந்திய ராணுவம் தன்னை சுற்றி வளைத்த கதையை கூறி கூட்டத்தினரை சிரிப்பலையில் ஆழ்த்தியதிலிருந்து அவர் பேசியது வரை அப்படியே …”
” நமக்கு எல்லா பக்கமும் ஆள் இருக்கு. டெல்லி விண்ணூர்தி நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தேன். தம்பி பிரபு வண்டியை எடுக்க போய்விட்டான். நான் தனியாக வந்து கொண்டிருந்தேன். என்னை இந்திய ராணுவம் சுற்றி வளைத்துவிட்டது. என் தம்பி பதறிப்போய் விட்டான். சுற்றி வளைத்தவர்கள், அண்ணா ஒரு செல்பி அண்ணா, ஒரு புகைப்படம் அண்ணா என கேட்டனர்” எனக்கூறி சீமான் தனது டிரேட் மார்க் சிரிப்பு சிரிக்க அரங்கமே கைத்தட்டி சிரித்தது.
‘அண்ணனை ரொம்ப பிடிக்கும்யா, அண்ணனை பத்திரமா பார்த்துக்கோங்க என ராணுவத்தினர் என் உடன் வந்தவர்களிடம் கூறினர். கொஞ்ச நேரத்துல பயம் காமிச்சிட்டீங்களேப்பா என என் உடன் வந்தவர்கள் ராணுவத்தினரிடம் கூறினர். என்னை விண்ணூர்திக்கு ஏற்றிவிட்டு ஒரு சல்யூட் போட்டனர்.
நமக்கு எல்லா பக்கமும் ஆள் இருக்கு. நாகலாந்து, திரிபுரா, மேகாலயா, காஷ்மீர் எல்லா இடத்திலும் நமக்கு ஆள் இருக்கு. பஞ்சாப்பில் எனக்கு நிறைய சொந்தக் காரங்க இருக்காங்க. எழுபது, எண்பது வயது ஆள்கள் எல்லாம் என்னை சீமான் அண்ணா என்று தான் கூப்பிடுவார்கள் ஒரு காலம் வரும், அன்று நம் தலைவனின் கனவை நனவாக்கி காட்டுவோம்.
அன்று தான் நம் தலைவனுக்கு கொடுக்கும் உண்மையான பிறந்தநாள் பரிசாக இருக்கும். என கூறி கதை முடித்துக் கொண்டு சாதிகள் பெயர் காரணத்தை கூற ஆரம்பித்தார் .
நீங்கள் எல்லாம் குறவக்குடி மக்கள் என்று பெருமை கொள்ள வேண்டும் குன்றில் வாழ்ந்த ஆதி குடிகளே குன்றக்குடியாகி பின்னர் குறவர்குடி ஆனோம் அதனால் நம் முப்பாட்டன் முருகனை குறவன்குடி தலைவன் ஆனான்.
அதற்கு அடுத்து நாமெல்லாம் நாகர்கள் இனத்தை சார்ந்தவர்கள், நாகலாந்து , நாகபட்டினம் , நாகராஜன் நாகராணி ! நாகேசன், இந்த பெயர்கள் எல்லாம் வர காரணம் இது தான் , தமிழை தாய்மொழியாக கொண்டதால் நாம் தமிழர் என்று அழைக்கிறோம்
தமிழ் அறிஞர்களான என்னுடைய (சீமான் ) மாமனார் தமிழ் கடல் நாவுக்கரசர் அய்யா காளிமுத்து குறிஞ்சி மலர் தோன்றியதாலே அதை குறிஞ்சி நிலம் என விளக்குறார் என மாமனாரை புகழ்ந்து தள்ளினார்.
குறிஞ்சி நிலத்தின் மேலே குன்றுகள் இருந்தால் கல் தோன்றிவிட்டது ஆனால் மண் தோன்றவில்லை என சீரியஸாக பேச நானும் பல அறிஞர்களை கேட்டுவிட்டேன் யாருக்கும் தெரியவில்லை குறிஞ்சியில் வாழ்ந்ததால் நாமெல்லாம் குன்றவர்கள் என அழைக்கப்பட்டனர் நாளடைவில் குன்றி குன்றி குறவர்கள் என அழைக்கப்பட்டோம் நாமெல்லாம் குறவர்கள் குறவகுடி மகள் என்று போய் பெருமையாக சொல்லு என்று தம்பிகளுக்கு கட்டளையிட்டார்.
குன்றில் ஏறி ஏறி இறங்கி இறங்கியதால் தசை நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கு ஏறி அது சிக்ஸ் பேக் ஆனதால்” முருக்கன்” முருகன் என அழைக்கப்பட்டார் நம் பெரும்பாடட்டன் முருகன் அங்கெல்லாம் கிழங்குககளை வேட்டை ஆடி உண்டோம் என்றார் ( தாவரங்களை கூட வேட்டி ஆடினார்களா என்று நீங்கள் கேட்க கூடாது) படிப்படியாக குன்றை விட்டு இறங்கி வாழ்ந்ததால் ஆயர் ஆனோம் அந்த இனத்தின் தலைவன் கோல் வைத்ததால் கோன் கோணார் என அழைக்கப்பட்டு அரசன் ஆனோம். அதனால் நாம் “கோனார் சாதி” ஆனோம் .
அப்படியே அங்கிருந்து கிழ் இறங்கி பள்ளத்தில் வாழ்ந்ததால் பள்ளர் ஆனோம் அதனால் நீயும் பள்ளன் நானும் பள்ளன் தான், அங்கு மாட்டை வளர்த்தோம் நாயக்கர் காலத்தில் சல்லிகாசுகளை கட்டி ஓடவிட்டதால் ஜல்லி கட்டு ஆனது ஆனால் ஏறு தழுவல் தான் உண்மையான பெயர் என புது விளக்கம் கொடுத்தார்.
நாமெல்லாம் அசைவம் சாப்பிட்ட கூட்டம் சைவம் சாப்பிட கூடாது என்றவர் ” கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை” . என்று நம் வள்ளவன் தாத்தா பாடுகிறார் அதனால் (மாடல்ல என்று குறளில் இருப்பதால்) “மாட்டை செல்வம்” என்று அழை , மாடு என்று அழைக்க கூடாது சிவனை வாங்குவதற்கு முன்னே காளையை வணங்கியவர்கள் நாம்.
அப்படியே குறிஞ்சி நிலத்தில் இருந்து கீழே பள்ளத்தில் இறங்கி வாழ்ந்தவர்கள் நாம் அதனால் “பள்ளர்கள் ஆனோம்” எல்லா சாதியிலும் பாண்டியன் என பெயர் இருக்கு அதனால் நாம் தான் “பாண்டியர்கள்” மலையில் வாழ்ந்து கீழே வரும்போது தான் மண் தோன்றுகிறது குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடை வாழ்ந்தவர்கள் “இடையர்கள்” நாம் எல்லாம் இடையர் சாதியினர் என பெருமை கொள் என்றார்.
அங்கிருந்து இறங்கி வேளாண்மை செய்து வாழ்ந்தோம் அதனால் “வேளாளர்கள் சாதி” என்று அழைக்கப்பட்டோம் மீன் விக்கிறவன் மீனவன் அல்ல அது காரண பெயர் பால் விக்கிறவன் பால் கார் , குப்பை அள்றவன் குப்பை கார் , குப்பை போட்டவன் என்ன பெயர் சொல்லு என்று தம்பிகளிடம் கேட்டார் உடனே விசில் சத்தம் பிளந்தது , குப்பை போட்ட நீங்கள்தாண்டா பெருங்குப்ப அதனால் நீங்கள்தாண்டா குப்ப காரன்கள் புஹாஹா என சிரித்தப்படியே,தம்பிகளை பார்த்து சொன்னார்.
உடனே தம்பிகள் ஊய்ய் உய்ய் என்று விசில் அடித்தனர் ஆரவாரம் செய்தனர் தம்பி உங்கள பாத்துதான் அண்ணன் குப்ப என்கிறார் என கூறிய போது ச்சு பேசாம இரு அண்ணன் பேசுறத கேளு என்றார் அந்த தம்பி
அடுத்து மீன் பிடிப்பதால் மீனவன் அல்ல பரந்த கடலில் மீன் பிடித்துக்கொண்டு பாரதத்தில் வாழ்ந்ததால் “பாரதர்கள் என்று அழைக்கப்பட்டோம்” மேற்பட்ட குடிசாதிகளில் இருந்து பிறந்தவர்கள் தான் உலக முழுவதும் குடி பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதெல்லாம் நம்ம அய்யா கவிக்குடி கவிக்கோ அப்துல் ரகுமானே பேசி இருக்கிறார் நீங்கள் போய் இணையத்தில் தட்டி பாருங்க ,எல்லா சாதியினருக்கும் நாம் தமிழர் கட்சி சீட் குடுத்திருக்குடா மூன்று சுவரில் வூடு கட்ட முடியாது , நான்கு சுவரில் வூடு கட்ட முடியும் அதனால் தான் தமிழ் தேசியத்தின் ஒரு பகுதியாக இறை வழிப்பாட்டை ( வீர தமிழர் முண்ணனி) முன்னெடுக்கின்றது நாம் தமிழர், ஆன்மிக பண்பாட்டு புரட்சி இல்லாமல் தமிழ் தேசியம் வளராது என்று அதை வைத்துள்ளேன்.
அம்பேத்கர் பாதை வேறு மாதிரி போட்டார், அதில் பயணம் நாம பண்றோம் இந்த கூட்டத்தில் எவன் குறவன், எவன் பறையன் , என்று சொல்கிறானோ ஆம் நான் தான் குறவன் , நான்தான் பறையன் என்று எழுந்து தைரியமாக நில், அதை எழுச்சி சொல்லாக மாற்று என்றார் உடனே சில தம்பிகள் முஷ்டியை உயர்த்தி நின்றனர் , அப்போது மழை ஜோராக பெய்ததை கண்டு தம்பிகள் ஓட ஆரம்பித்தனர்.
அண்ணன் தொடர்ந்து படியே பேசி கொண்டு மழை பெய்தால் ஓட கூடாது , வயநாட்டில் ஓடினார்களா? மழையை நேசி , ரசி என்று தம்பிகளை பார்த்து திட்டினார். மழையில் நெளிந்து கொண்டே இருந்தனர். கொக்கா கோலா ஒரே மூச்சில் நீ குடி சாகுறையா இல்லையா பார்ரா , அதை பாத்ரூம்ல ஊத்தி கழுவு சுத்தமாகும் நீ குடித்தால் குடல் சுத்தமாகும் இதை அறிவார்ந்த என் தமிழ் சமூகம் சிந்திக்கனும் என்று புஹாஹாஹா என சிரித்தபடி தம்பிகளுக்கு கட்டளையிட்டார்.
குறவர்கள் குடிகளே பறையர் குடி அதனால் காடு தான் நமக்கு வீடு “நாம் குறவர்கள்” அதனால் கவனத்தில் நீங்கள் வச்சுக்க என்று எதிர்கால இவர் சிந்தனையை போட்டுடைத்தார் அதற்கும் தம்பிகள் மாட்டு மந்தை கூட்டம் போல தலை ஆட்டினார்கள். காட்டில் வாழ்ந்தவர்கள் மாவோயிஸ்டுகள் என்றால் சீனா முழுவதும் மாவோயிஸ்டுகள் தானே அவனோடு மோடி ஏன் நட்பு பாரட்ட வேண்டும் என்று கேள்வி கேட்டு பைத்தியக்கார பயலுக தொலைச்சு புடுவேன் எச்சரித்தார்.
கிருஷ்ணகிரி தமிழ் பெண்கள் கூட்டிட்டு போய் ஆந்திராவில் மிளகாய் பொடி தேச்சது இந்த திராவிட கட்சிகள் கண்டுக்கல உன் அண்ணன் ஆட்சியில் இருந்தால் அந்த போலீஸை அழைத்து வந்து அந்த இடங்களில் மிளாக பொடி தேய்ச்சி உட்ருவேன் என்றார் அருகில் இருந்த தம்பி விசில் அடிக்க , இது எப்ப நடந்தது என நாம் கேட்க , அது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்தது அதனால் எனக்கு தெரியவில்லை என கூறி முறுக்கி கொண்டான்.
“கருணாநிதியை சண்டாளன் ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் எங்களை திராவிடர்கள் என்று கொச்சைப்படுத்தி சொல்லுவதால் சண்டாளன் என்று சொல்கிறோம்” என்றதும் கூட்டத்தில் , ஊய்ய் உய்ய் என கைதட்டி ஆரவாரம் செய்தனர் ,
தமிழ் புதல்வன் பெயரை ஏன் திராவிட புதல்வன் , என்று பெயர் வைக்கவில்லை இது எவ்வளவு பெரிய ஏமாற்று “ஆயிரம் ரூபாய்க்கு பிறந்தவர்களடா” நீங்கள் என தம்பிகளை பார்த்து கேட்க அதுக்கும் கைத்தட்டினான்கள் அந்த மந்தை கூட்டம், “1000 ரூபாய் கொடுப்பதை சீமான் பின்னால் திரள்வதை தடுக்கதான் என்று ஒரு போடுபோட்டார்” வாங்க சீமான் என்றால் வாங்கய்யா , என்று சொல்வேன் வாடா சீமான் என்றால் என்னாடா என்று பேசுவேன், அதேபோல் நீங்களும் பேசுங்க அவன் வெட்ட நினைக்கும் போதே நீ வெட்டி விடு என்று உசுப்பு எத்தினார் தம்பிகளை பார்த்து.
எல்லா நாட்டிலும் சிலை வைத்ததை உடைத்து விட்டார்கள் அதுபோல இங்கு உள்ள கருணாநிதி சிலைகளை உடைக்க வேண்டும் நீ தயாரா இரு என தம்பதிகளுக்கு கட்டளையிட்டார்.
நீ என்ன ஜெயிலுக்கு அனுப்பினால் வெளியே வந்து கொள்வேன் நீ டெட்பாடிடா செயற்கை சுவாசம் கருவிகள் பொருத்தி சுத்திட்டு இருக்கடா என்று முதல்வர் ஸ்டாலினை ஏகத்துக்கும் ஒருமையில் திடிட்டிக் கொண்டே தள்ளாடிப்படியே அதிபர் மேடையை விட்டு இறங்கும்போது அட ச்சீ..மான் என கிளம்பினோம்
கடந்த பத்தாண்டுகளில் அண்ணன் பேசிய எல்லா மேடைகளிலும் “புஹாஹாஹா” “வாய்ப்பில்ல ராஜா” “தொலைச்சிபுருவேய்ன்” “பிச்சிப்புருவேய்ன்” “கிழிச்சிப்புருவேய்ன்” “அடிச்சிப்புருவேய்ன்” “தீர்த்துப்புருவேய்ன்” “கொண்டே…புருவேய்ன்” போன்ற வழக்கமான தத்துவங்களையே வெளிப்படுத்தி வந்த அண்ணன்
இப்ப இடை இடையே “சண்டாளன்” “பிசுறு” “மசுறு” “வாடா” “போடா. “டேய்” , “ஹேய்” “ஓய்” என அண்ணன் முன்வைக்கும் இது போன்ற சைடுடிஷ்கள் தான் நமக்கு சுவாரசியமூட்டுகின்றன.
மேற்படி பேச்சுக்கு தம்பிமார்கள் ஹே ஊய்ய் என கைதட்டி விசில் அடித்து ஆரவாரம் செய்துள்ளனர். மண்டையில் மூளை என்கிற வஸ்து இருக்கிறவர்களால் எப்படி இதற்கெல்லாம் கைதட்ட முடியுது ? .
சீமான் பேச்சில் கொதித்தெழுந்த முன்னாள் நாதக நிர்வாகியும் தற்போது தர்மபுரி திமுக இணையதள பிரமுகர்
KCR .தங்கராஜ் கூறுகையில்
நீங்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு பிறந்தவர்களடா, ஸ்டாலின் ஒரு டெட்பாடி அவர் சிலிண்டர் வைத்து சுற்றிக் கொண்டு வருகிறார் . எங்களை திராவிடர்கள் என்று சொல்வதாலே நாங்கள் கருணாநிதியை சண்டாளன் கருணாநிதி என்று குறிப்பிடுகிறோம் என சீமான் பேசியிருப்பது கொஞ்சம்கூட சகித்துக்கொள்ள முடியாதது.
தனது ஒவ்வொரு மேடை பேச்சின் போது அவதூறு பேசுவதும், அரசு உட்பட அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் என எல்லோரையும் மலிவான சொற்களால் கேலிசெய்வதும், மட்டையடியாகத் திட்டுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல. கேலிப் பேச்சாலும், உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் வார்த்தைகளாலும் மக்களைக் கவர நினைப்பது சீமானின் வழக்கமான பாணிதான். எந்த வகையிலும் மக்களை அரசியல் மயப்படுத்த முயலாத அவரது அபத்தக் கூச்சல்களில் உச்சம் பெற்ற ஒன்றுதான் 1000 ரூபாய்க்கு பிறந்த பயலுகள் என்ற ஈன பேச்சு
‘வரலாறு தெரிந்திருக்க வேண்டும், படிக்க வேண்டும் மக்களே, சிந்திக்கணும் மக்களே’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை பேசும் சீமானுக்கு அதையே நாம் திருப்பிச்சொல்லித்தர வேண்டியிருக்கிறது.
பெண் ஒருவரைப் பொதுவெளியில் கீழ்த்தரமாகப் பேசுகிறோம் என்கிற உணர்வு சிறிதுமின்றி நாட்டுக்காகப் போராடி சிறை சென்று திரும்பிய தியாகி போன்ற தொனியில் அவர் பேசினார். வெடித்துச் சிரித்தபடி சீமான் இதைச் சொன்னபோது சுற்றியிருந்த அனைவரும் சிரித்தனர். சீமானின் இந்த இழிசெயலைக் கேட்டுச் சிரிக்க ஆட்டு மந்தைகள்கூடக் கொஞ்சம் யோசித்திருக்கும். ஆனால், சீமானைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர்கூட முகம் சுளிக்கவோ சீமானின் பேச்சைக் கண்டிக்கவோ குறைந்தபட்சம் அதிருப்தியை வெளிப்படுத்தவோகூட இல்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிமை தருவோம் என்று பீற்றிக்கொள்கிற கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு ஊடகங்கள் முன்னிலையில் பெண்களை பற்றித் தரக்குறைவாகப் பேசுவதுதான் சீமான் பேசுகிற தமிழர் பண்பாடுபோல.
இந்த நிலம் மட்டும் என் கைக்கு வரட்டும் அப்ப வச்சுக்குறேன் …’ என்று மேடைதோறும் முழங்குகிற சீமானின் கைகளுக்கு நிலம் வந்துவிட்டால் பெண்களின் நிலையை யோசித்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஒருவர் என்ன கதையை அளந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு கைதட்டி ரசிக்கிற கூட்டம் இருக்கிறபோது பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்பதற்கு சீமானும் அவரைச் சுற்றியிருக்கும் கூட்டமுமே சாட்சி.
சீமான் சொன்னால் போஸ்டர் ஒட்ட வேண்டும், உண்டியல் குலுக்க வேண்டும், பரப்புரை செய்ய வேண்டும் – அதுதான் ஒரு உண்மையான தொண்டனின் கடமை. கட்சியை வளர்க்க எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.
ஜெயிலுக்கு போனால்கூட சொந்தக் காசில் ஜாமீனில் வெளியே வந்து கொள்ள வேண்டும். அண்ணன் வந்து நம்மைக் காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்காத அர்ப்பணிப்புணர்வு கொண்டவராக இருக்க வேண்டும். அந்தப் பிரச்சினைக்கு ஏன் போராடவில்லை, இந்தப் பிரச்சினைக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, அப்படி செய்யலாமா, இப்படி செய்யலாமா என கருத்து சொல்லும் கருத்துப்புலி வேலை எல்லாம் பார்க்கக்கூடாது.
எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அதிபராக மட்டுமல்ல ஆண்டவனாக ஏற்றுக் கொண்டு சதா சர்வகாலமும் புகழ்பாட வேண்டும். நினைப்பில் இருக்கிறார். குறிப்பாக சிறுபான்மையினர் மற்றும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களை குறிவைத்து அவர் நடத்தப்படும் இந்த அரசியல் நாடகத்திற்கு எண்ணற்ற படித்த இளைஞர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் அதனை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.
ஆயிரம் ரூபாய்க்கு பிறந்தவர்கள் என விமர்சிக்கும் சீமானுக்கு ஒரு கேள்வி?இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நரேந்திர மோடி கொடுக்கும் 2000 ரூபாய்க்கு விமர்சிக்காததன் உள் அர்த்தம் என்ன..?? எண்ணும் கேள்வி ஞாயமானதே .
– மணிகண்டன்
சிறப்பு தரமான சம்பவம் இது போன்ற நல்ல செய்திகளை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் தமிழ்நாட்டில் சீமான் போன்ற ஏமாற்று அரசியல் பிழைப்புவாதிகள் இதுபோன்ற பிழைப்பு அரசியலை தடுக்க வேண்டும் மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
Super
மரண பங்கம்
சிரிப்பு அரசியல்வாதி 😆
மரண பங்கம்