ஜி.எஸ்டி பரிதாபங்கள் தொடா் – 2
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்த போதுமான புரிதலும் பக்குவமும் இல்லாத ஜி.எஸ்.டி. அமலாக்கத்துறை அதிகாரிகள் பல இடங்களில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களை வழிமறித்து சாவியைப் பிடுங்கிக்கொள்வது தொடங்கி, டிரைவரின் சட்டையைப் பிடித்து சண்டை போடுவது வரையில் ஈடுபடுகிறார்கள் என்பதை தொடரில் பதிவு செய்திருந்தோம்.
ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் நடைபெறும் விதிவிலக்கான சம்பவங்களாக இவற்றை கடந்து சென்றுவிட முடியாது என்பதை உறுதிபடுத்தும் வகையில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்.
இவற்றுக்கு ஆதாரமாக, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பூதகுடி டோல்கேட் பகுதியில் நிகழ்ந்த சில சம்பவங்களை குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தின் ஒருபெரிய கார்ப்பரேட்சிமெண்ட் கம்பெனியின் விளம்பரம் அச்சிட்ட டி.சர்ட்டுகளை கொத்தனார்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக டாடா சுமோ வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதாக சொல்லி 20,000 அபராதம் கட்டச் சொல்லி நிர்ப்பந்தித்திருக்கிறார்கள்.
சம்பந்தபட்ட சிமெண்ட் நிறுவனத்தின் மண்டல அலுவலகம் மற்றும்சென்னை தலைமை அலுவலகத்திலிருந்து அந்நிறுவனத்தின் ஆடிட்டர் உரிய விளக்கம் அளித்தும் அதனை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அன்றைய தினம் காலையிலிருந்து மாலை வரையில் இந்த பஞ் சாயத்து நீண்டிருக்கிறது. பின்னர், ஒருவழியாக 5000 ரூபாய் இலஞ்சப் பணம் பெற்றுக்கொண்டு சம்பந்தபட்ட வாகனத்தை விடுவித்திருக்கின்றனர்.
விராலிமலையில் உள்ள ஒரு விவசாயப் பயன்பாட்டுக்கான இயந்திரங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அது. பொதுவில் புதியதாக கார் வாங்க வேண்டும் என்று ஒரு ஷோரூம் சென்றால், அந்த காரின் பிரத்யேக 000 அம்சங்களை அதன் விற்பணை பிரதிநிதி எடுத்துரைப்பதோடு. சம்பந்தபட்ட காரை ஓட்டி பார்ப்பதற்கும் அனுமதிப்பார்கள். விவசாயப் பயன்பாட்டுக்கான இயந்திரத்தை விற்பனை செய்யும் நிறுவனம் தனது ஷோரூமில் எப்படி அதன் செயல்பாட்டை காட்டிவிட முடியும். களத்துக்கு சென்றுதான் காட்டியாக வேண்டும்.
அதன்படி, விவசாயப் பயன்பாட்டுக்கான உழவு இயந்திரத்தை வாங்குவதற்கு முன்வந்த விவசாயி ஒருவருக்கு அந்த இயந்திரத்தின் செயல்திறனை களத்தில் மாதிரி ஓட்டம் (டெமோ) செய்து காட்டுவதற்காக, மினி லாரியில் ஏற்றி எடுத்து சென்றிருக்கிறார்கள். உரிய ஆவணங்கள் இன்றி ஏற்றி வந்ததற்காக ரூ.60,000 அபராதம் கட்டு என்று மல்லுக்கட்டியிருக்கிறார்கள், ஜி.எஸ்.டி. அமலாக்கத்துறை அதிகாரிகள். அந்த உழவு இயந்திரத்தின் மதிப்பே வெறும் 37,000 தான். அதற்க 60,000 அபராதமாம். எவ்வளவு சொல்லியும் விளக்கத்தை ஏற்காத அதிகாரிகள் வாகனத்தை சிறைபிடித்துக்கொண்டனர்.
இந்த தகவல் பரவியதையடுத்து, சுற்று வட்டாரத் திலிருந்து வந்த விவசாயிகள் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் அடாவடியை எதிர்த்துக் கேட்டிருக்கின்றனர். தங்களது தரப்பு நியாயத்தை முன் வைத்திருக்கின்றனர். பூதகுடி டோல்கேட் அருகில் பரபரப்பாக இருந்ததை கண்டு என்ன ஏதென்று விசாரித்திருக்கிறார், அந்த வழியே பயணம் செய்த ஆளும்கட்சியை சோ்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவா். அவரும் அவருக்கு தெரிந்த உயா் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விவசாயிகள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைகத்து சமாதானமாக பேசி பிரச்சனையை முடித்துள்ளார்.
நடந்த சம்பங்களையெல்லாம் வீடியோவாக பதிவு செய்து கொண்ட, ஜி.எஸ்.டி. அதிகாரிகள், தங்களிடம் ஆளும்கட்சி பிரமுகா் தகராறு செய்தார் என்பதாக மேலிடத்திற்கு போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம், தலைமையிலிருந்து ஆளும்கட்சியின் மாவட்ட செயலாளா் வரையில் பேசப்பட்டிருக்கிறது. அவரும் சம்பந்தப்பட்ட நபரை கண்டிக்கும் அளவுக்கு போயிருக்கிறது. தவிர்க்க முடியாத நிர்வாக நடைமுறைகள், தனிச்சிறப்பான சூழல்களை கருத்தில் கொள்ளாமல் வறட்டுத்தனமாக சட்டத்தை அமல்படுத்துகிறேன் போ்வழிகள் என்ற பெயரில், ஜி.எஸ்.டி. அமலாக்கத்துறை அதிகாரிகள் காட்டி வரும் கெடுபிடிகள் பெருமளவில் வணிகா்களை திருடன்ளாகவே பார்க்கும் அவா்களின் கண்ணோட்டமே பிழையானது என்கிறார்கள்.
ஜி.எஸ்.டி. அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வாறு பக்குவதற்கான காரணங்களைாக, மாதாந்திர டார்கெட் என்பதை சொன்னாலும், களத்தில் இருப்பவா்கள் குறிப்பிட்ட ஆண்டுகளில் வழக்கமாக வழங்கப்படும் பணி உயா்வில் கீழிலிருந்து வந்தவா்கள் என்பதும் அவா்களுக்கு மேல் அதிகாரிகளாக இருப்பவா்கள் குரூப்1 தோ்வு எழுதிவிட்டு நேரடியாக அதிகாரரிகளாக அமா்வதும்தான் பிரச்சனை என்கிறார்கள். இவா்களுக்கிடையிலி், பாவம் வணிகா்கள்தான் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள் என்கிறார்கள்.
ஜி.எஸ்டி பரிதாபங்கள் தொடரும்….
— ஆதிரன்.
G.S.T. பரிதாபங்கள் தொடா்-1 ஜ படிக்க click