அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பாலியல் தொந்தரவு! துடைப்பகட்டையால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி கைது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

துடைப்பகட்டையால் அடி வாங்கிய அதிமுக நிர்வாகி!

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

படப்பை பகுதியில் இளம் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து  மணிமங்கலம் காவல்துறை நடவடிக்கை.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம் வயது 60. இவர் அதிமுக கட்சியில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

Admission Enquiry Form

இவருடைய வீட்டில் வாடகைக்கு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் பெண்கள் குடியிருந்துள்ளனர். இந்நிலையில் தன்னுடைய வீட்டில் குடியிருந்த பெண்களுக்கு மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பாலியல் தொந்தரவு - அதிமுக நிர்வாகி கைது இதனால் வீட்டை விட்டு காலி செய்து வேறு இடத்திற்கு அந்தப் பெண்கள் சென்ற நிலையிலும் தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் அதனைத் தொடர்ந்து இன்று காலை அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று மீண்டும் அவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி பொன்னம்பலத்தை துடைப்பகட்டையால் அடித்து, அவரை விரட்டியுள்ளனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மணிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரண மேற்கொண்டு வந்தனர்.

பாலியல் தொந்தரவு - அதிமுக நிர்வாகி கைது
பாலியல் தொந்தரவு – அதிமுக நிர்வாகி கைது

அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்தது உண்மை என்று தெரிய வந்ததால் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின்பு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

படப்பை பகுதியில் அதிமுக நிர்வாகி தன்னுடைய வீட்டில் குடியிருந்த பெண்களை மிரட்டி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததும் பாதிக்கப்பட்ட பெண்களின் சக தோழிகள் அதிமுக நிர்வாகி தொடப்பத்தால் அடித்து விரட்டியதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.