ஷாருக்கான் மகனும் நடிகை மும்தாஜும் தப்பிய கதை!
ஷாருக்கான் மகனும் நடிகை மும்தாஜும் தப்பிய கதை!
2021 அக்டோபர் மாதம் 02-ஆம் தேதி மும்பையில் நடுக்கடலில் நிற்கும் சொகுசுக் கப்பலில் போதை விருந்து நடப்பதாக மும்பை மாநகர போலீசுக்கு தகவல் கிடைத்ததும் அதிரடியாக அந்தக் கப்பலில் நுழைந்தனர் போலீசார். அங்கே போதை விருந்தில் தள்ளாடிய பாலிவுட்டின் டாப் ஹீரோ ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 14 இளைஞர்களைக் கைது செய்தனர். என்.சி.பி.(போதைப் பொருள் தடுப்புப் பிரிவு) யின் ஸ்பெஷல் டீம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் கைதான ஆர்யன்கான் உட்பட அனைவருமே ரொம்ப ரொம்ப காஸ்ட்லியான போதைப் பொருளை சாப்பிட்டிருந்ததும் சர்வதேச போதைப் பொருள் மாஃபியாக்களிடம் தொடர்பு வைத்திருந்ததையும் கண்டுபிடித்தது.
மகனின் கெட்ட சகவாசத்தால் ரொம்பவே துடித்துப் போன ஷாருக்கான், போதை வழக்கிலிருந்து மகனை விடுவிக்க பல வழிகளிலும் தீவிரமாக இறங்கினார். இதன் பலன் தான் சமீபத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்யப் பட்ட சார்ஜ்ஷீட்டில், ”ஆர்யன்கான் தப்பே பண்ண வில்லை. ஆரம்பகட்ட விசார ணையில் ஏகப்பட்ட தவறுகள் நடந்துவிட்டது.
எனவே ஆர்யன்கான் உட்பட 6 பேரும் நிரபராதிகள்” என்றார் என்.சி.பி.யின் டைரக்டர் சஞ்சய்சிங். இது குறித்து காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்,”இதிலிருந்தே போலீசின் யோக்கியதை தெரிஞ்சுக்கங்க” என விரக்தியாக கூறினார். சரி, ஆர்யன்கான் அந்தக் கப்பலுக் குள்ள எதுக்குத்தான் போனாரு. ஒருவேளை கப்பலில் இருக்கும் கக்கூஸ், பாத்ரூம் பைப்லைனில் தண்ணி வருதானு பார்க்கப் போயிருப்பாரோ? இருந்தாலும் இருக்கும், நாம என்னத்தக் கண்டோம்.
இதே மாதிரி கதை தான் நம்ம சென்னையிலும் போன மாசம் நடந்துச்சு. அதாவது மாஜி கவர்ச்சி நடிகை மும்தாஜின் வீட்டில் வேலை பார்க்கும் 15 வயது சிறுமி, மும்தாஜும் அவரது தாயாரும் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அண்ணாநகர் போலீசிடம் சொல்லிக் கதறியழுதார். மும்பை போலவே ஆரம்பகட்ட விசாரணையில் இதை உறுதிப் படுத்திய அண்ணாநகர் போலீஸ், விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்தாஜையும் அவரது தாயாரையும் அழைத்தது.
ஆத்தாடி போலீஸ் விசாரணையா என அலறிய மும்தாஜ், தனக்கு மிகவும் நெருங்கிய சினிமாப் புள்ளி மூலம் போலீசை ’வெயிட்’டாக ‘கவனித்து’விட்டார். போலீசின் யோசனைப்படி அந்த சிறுமியையும் மும்பைக்கு பேக்-அப் பண்ணி, வழக்கிலிருந்து தப்பிவிட்டார். அப்ப அந்தச் சிறுமியை மும்தாஜ் துன்புறுத்தலையா?ன்னு நீங்க யோசிக்கலாம். அந்தச் சிறுமியின் முதுகில் செல்லமா தட்டியிருப்பார், கன்னத்தக் கிள்ளிக் கொஞ்சியிருப்பார்னு யோசிக்கணும். அம்புட்டுத் தான் நம்மால சொல்ல முடியும்.
-மதுரை மாறன்