தெறிக்கவிட்ட தலைமைசெயலாளர்… என்று தணியும் இந்த காக்காய் பிடிக்கும் மோகம்

0

தெறிக்கவிட்ட தலைமைசெயலாளர்… என்று தணியும் இந்த காக்காய் பிடிக்கும் மோகம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் Distinguished Alumnus விருது வழங்கி கவுரவிப்பது, தனது பதவியின் மாண்பைக் குலைத்துவிடும் என்று கருதி தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் அதை அன்போடு மறுத்து விட்டதாகத் தெரிகிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஏற்கனவே மேன்மைமிகு முன்னாள் மாணவர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும்  “அழைப்பு” விடுக்கப்பட்ட வகையிலும், முன்னாள் மாணாக்கர்கள் சங்கம் என்ற பெயரில் 1000 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே சங்கத் தேர்தலில் வாக்குரிமை என்று அறிவித்து ஒரு கும்பல் சங்கத்தை ஹைஜாக்

பண்ணிய வகையிலும், முன்னாள் மாணாக்கர் கள் சங்கத்தின் நிர்வாகப் பதவிகளில் பல்கலைக் கழகத்தில் சம்பளம் வாங்கும் தற்போதைய ஊழியர்கள் இருப்பது தார்மீக அடிப்படையில் தவறு என்பதை ஏற்றுக்கொள்ளாமலேயே உட்கார்ந்திருப்பதுமாக பல விவகாரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

நூற்றாண்டு கடந்த கல்வி நிறுவனத்தில் ஆரம்ப காலத்தில் துணைவேந்தர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தார்கள். அந்த காலத்தில் நல்ல நூலக வசதி, திறமையான பேராசிரியர்கள் இருந்தனர். உயர்கல்வி வாய்ப்புள்ள கல்விப்புலம் என பல முக்கிய காரணிகள் மாணாக்கர்கள் எந்த தேர்வு என்றாலும் எளிதில் வெற்றி பெற உதவின. இன்று ஆண்டுக்குத் தோராயமாக 150 கோடி ரூபாய் வரிப்பணத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்தை ஒரு கோச்சிங் இன்ஸ்ட்டியூட் ஆகச் சுருக்கும் பாங்கு கேள்விக்குட்படுத்த வேண்டியதே.

ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து வரும் மாணாக்கர்கள் படிப்புக்குத் தொடர்பில்லாத பல துறைகளிலும் நுழைந்து, அதன் நுட்பங்களைக் கற்று சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பது ஒரு academic institution என்ற வகையில் பார்த்தால் பாராட்டத்தக்கது.  மருத்துவம், கால்நடை அறிவியல், வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் போன்றவை technical institutions வகையிலானவை. இங்கிருந்து வருபவர்கள் தத்தமது துறைகளில் பல புதிய உச்சம் தொடுகிறார்கள் என்பதே பெருமைப்படத்தக்க ஒன்றாக இருக்க முடியும். இத்தகைய கல்வி நிறுவனங்களில் ஒரு batch-ஐ  outstanding alumnus என்றால் அந்த தொழிலுக்கு ஒரு மதிப்பைக் கொண்டு வந்தவராக, உயர்வான பங்களிப்பை நல்கியவராக  இருக்க வேண்டும். ஆனால் நம் ஊரில் பெஸ்ட் அக்ரி ஸ்டூடன்ட், பெஸ்ட் மெடிக்கோ என்றால் ஐஏஎஸ்,  ஐபிஎஸ் போன்ற சிவில் சர்வண்டுகள், வங்கி உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோரைக்  காட்டுகிறார்கள் எனில் தமது அடிப்படை புரிதலி லேயே தவறு இருக்கிறது அல்லது தவறான முன்னுதாரணங்கள் நமக்கு ஜிகினா ஒட்டப்பட்டு present செய்யப்படுகின்றன என்றே பொருள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சிவில் சர்வண்ட்கள் திறமையானவர்கள்  என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒரு technical institution-ல் இருந்து வெளிவந்தவர்களில் மேன்மைமிகு மாணவர் என்று அந்த துறையை விட்டே ஓட்டம் பிடித்துவிட்டவர்களைக் காட்டு வது எந்த வகையில் அறம் என்று தெரியவில்லை.

பல்வேறு நாடுகளுக்குச் சென்று படித்து, பணிபுரிந்த அனுபவத்துடன் இந்தியா திரும்பி பணம் புரட்டி மருத்துவமனை ஆரம்பித்து, ஒவ்வொரு பிரிவிலும் திறமையான மருத்துவர்களைப்

பிடித்துக் கொண்டுவந்து சம்பளம் கொடுத்து உலகத் தரத்திலான சிகிச்சையை இங்குள்ள வர்களுக்கும் கிடைக்கும்படி செய்பவர்களை எல்லாம் விட்டு விட்டு அன்புமணி இராமதாசு, விஜயபாஸ்கர், தமிழிசை சௌந்தரராஜன் போன்றோரை சிறந்த மருத்துவர்கள் என்று அறிவிப்பது கேலிக்கூத்தாக இருக்காதா? அரசியலிலோ அல்லது வேறு துறைகளிலோ அவர்கள் சிறந்து விளங்கலாம். ஆனால் ஒரு technical institution தங்களது சிறந்த product என்று துறைக்கு சம்பந்தமே இல்லாத தொழிலில் இருப்பவர்களை அழைத்து கௌரவிப்பது அந்த விருது வழங்கும் தேர்வுக்கமிட்டியில் இருப்பவர்களின்  சொந்த நலன் களுக்காக செய்யப்பட்டது என்றே சொல்லலாம்.

தமிழக  அரசின் வேளாண்மைத்துறை தோராயமாக நாளொன்றுக்கு 100 கோடி ரூபாயை burn பண்ணுகிறது. ஆண்டுக்கு சுமார் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மானியத்தில் வழங்க வாங்கப்படும் பொருட்கள் என்ற வகையில் சுமார் 10000 கோடி ரூபாய் வட மாநில தொழிலதிபர்களுக்கே சென்று சேர்கிறது. வேளாண்மை படித்து சிவில் சர்வண்ட் ஆனவர்கள் கொஞ்சம் யோசனை பண்ணி திட்டங்கள் தீட்டியிருந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள் உண்டாகியிருக்கும், பல ஆயிரம் தொழிலதிபர்கள் உருவாகியிருப்பார்கள்.

IAS, IPS தேர்வானவர்களுக்கும் IRTS, IPoS ஆனவர்களுக்கும் திறமையில் ஒரு வித்தியாசமும் இருக்காது. இரண்டு தாள்களில் இரண்டு பத்து மதிப்பெண் வினாக்கள் குருட்டு அதிர்ஷ்டத்தில் வந்து உட்கார்ந்தால் உச்சம் தொட்டு விடலாம். நேர்முகத் தேர்வில் இருபது மதிப்பெண் கூடுதலாக வந்தாலும் சரிக்கட்டப்பட்டுவிடும். IAS, IPS  அதிகாரிகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் கடைசி பத்து சர்வீஸ்களில் வருபவர்களுக்குக் கிடைப்பதில்லை.

கோவேக்சின் தயாரிப்பில் ஈடுபட்ட பாரத் பயோடெக்-இன் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்தான். மலிவு விலையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைக் கொண்டு வந்ததும் இந்த நிறுவனமே.  இது போன்ற கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருபவர்கள், வேளாண்மை சார்ந்த தொழிலில் நேரடியாக அல்லது மறைமுகமாகவோ, கல்விப் புலத்திலோ  சாதித்தவர்களை அழைத்து வந்து இப்போது படிக்கும் மாணாக்கர்களுக்குக் காட்டாமல் சிவில் சர்வண்ட்களை மட்டுமே கொண்டாடுவது நாம் அறிவியல், தொழில்துறை சார் சமூகமாக மாறாமல் கிளெரிக்கல் மனப்பாங்கு கொண்டவர் களாக வே இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. உயர் பதவியில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை காக்காய் பிடித்து தங்களது சொந்த காரியங்களை நேரடியாக சாதித்துக்கொள்ள முடியாது என்பதால் விருது வழங்குகிறோம் என்று அழைத்து, நட்பாகி காரியம் சாதித்துக்கொள்ள விரும்பும் கும்பலிடம் இருந்து தள்ளி நிற்பதே நல்லது என்பதை பலமுறை இறையன்பு அவர்கள் எழுதியிருக்கிறார். இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விருது தேர்வுக்கமிட்டியினர் காக்காய் பிடிக்கும் நோக்கில் வழங்கவிருந்த “மேன்மைமிகு முன்னாள் மாணவர்” என்ற விருதைப் புறக்கணித்திருப்பதன் மூலம்  தேவையற்ற சர்ச்சையைத் தவிர்த்திருக்கிறார். கருத்து சொல்வது மாதிரி ஆரம்பித்து இப்படி லேசாக பாராட்டுவது காக்காய் பிடிப்பதில் வராதா என்று பலருக்குத் தோன்றக்கூடும். நம் நாட்டை சீரழிப்பவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று நமது சிவில் சர்வண்ட்கள் என்பதிலும், அவர்களது வறட்டு bureaucracy, சிவப்பு நாடா முறைகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

-ஆர்.எஸ்.பிரபு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.