அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அண்ணாமலை அவ்வளவுதானா? பாஜக பட்டியல் தந்த அதிர்ச்சி !

திருச்சியில் அடகு நகையை விற்க

தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. உள்ளிட்டு பிரதான கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையே முன்னெடுத்துவிட்ட நிலையில், தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் காலம் தாழ்த்தி வந்தனர். ஏப்ரல்-03 ஆம் தேதிக்குள் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை அறிவிக்காவிட்டால், திமுகவே வேட்பாளர்களை அறிவிக்கும் நிலை வரும் என்பதாக பேசியிருந்த நிலையில், ஒருவழியாக இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள்.

அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் :

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

1) ஆவடி – எம் ராஜசிக்மா மகேந்திரா

2) மயிலாப்பூர் – முன்னாள் ஆளுநர் டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன்

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

3) தளி -டாக்டர் நாகேஷ் குமார்

4) திருவண்ணாமலை – சி ஏழுமலை

5) ராசிபுரம் (தனி) – டாக்டர் எஸ் டி பிரேம்குமார்

6) மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார்

7) உதகமண்டலம் – பூதராஜன்

8) அவிநாசி (தனி) – மத்திய இணைஅமைச்சர் டாக்டர் வேல்முருகன்

9) திருப்பூர் தெற்கு –  எஸ் தங்கராஜ்

10) கோயம்புத்தூர் வடக்கு –  வானதி சீனிவாசன்

11) திருவாரூர்-  கோவி சந்துரு

12) தஞ்சாவூர்  –  கருப்பு எம்  முருகானந்தம்

13) கந்தர்வகோட்டை (தனி) – சி உதயகுமார்

14 ) புதுக்கோட்டை – எம் ராமச்சந்திரன்

15)  அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

16) திருப்பத்தூர் –  கே சி திருமாறன்

17) மானாமதுரை( தனி) – பொன் வி.பாலகணபதி

18) மதுரை தெற்கு – பேராசிரியர் ராமசீனிவாசன்

19) சாத்தூர் –  நைனார் நாகேந்திரன்

20) ராமநாதபுரம்-  ஜிபிஎஸ் கே.நாகேந்திரன்

21)  திருச்செந்தூர் – கே ஆர் எம் ராதாகிருஷ்ணன்

22)  வாசுதேவநல்லூர் (தனி ) – ஆனந்த் அய்யாசாமி

23) ராதாபுரம் –  எஸ் பி பாலகிருஷ்ணன்

24) நாகர்கோவில் –  எம் ஆர் காந்தி

25) குளச்சல்  – டி சிவக்குமார்

26) பத்மநாபபுரம் – பி ரமேஷ்

27) விளவங்கோடு – எஸ் விஜயதாரணி

தற்போது வெளியாகியுள்ள 27 வேட்பாளர்களில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஐந்து பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது பாஜக. மேலும், மொத்தத்தில் மூன்று சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மேலும், சிட்டிங் எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருமகள் கீர்த்திகா சிவகுமாருக்கு  மொடக்குறிச்சியில் போட்டியிடுகிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

காங்கிரசிலிருந்து கட்சி மாறி பாஜகவுக்கு வந்த விளவங்கோடு விஜயதாரணிக்கு சென்ற முறை சீட் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்துடன் இருந்துவந்த நிலையில், தற்போது அதே தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

முதலில் மாநில தலைவர் பதவியிலிருந்து மெல்ல கழட்டிவிடப்பட்டார். தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் அவருக்கு இடமில்லை. அவர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்படுவதாக அதிருப்தி நிலவிவரும் நிலையில், அண்ணாமலைக்கு சீட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் முன்கூட்டியே, கணித்துவிட்டதால்தான் என்னவோ, நேற்றைய தினம் செய்தியாளர்களிடம், “முதல் ஆளாக ஓட்டுப்போட்டுவிட்டு, வாக்குச்சாவடி முகவராக அமரப்போகிறேன்” என்று பேசியிருந்தார். இரண்டுமுறை தேர்தல் களம் கண்டவர், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு வாக்குச்சாவடி முகவராக அமர்வதற்கு தேர்தல் கமிஷனில் ஒரு மாதத்துக்கு முன்னரே ஒப்பதலை பெற்றிருக்க வேண்டுமென்பதைக்கூட அறியாமல் இருக்கிறாரே, என்று அவரது ஆதரவாளர்களையே ஆதங்கப்பட வைத்துவிட்டார், அண்ணாமலை!

–              அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.