பொங்கல் விழாவுடன் ‘அறுவடை’ ஷூட்டிங் நிறைவு!

‘லாரா’ படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு ‘அறுவடை’.

எம். கார்த்திகேசன் தயாரித்து எழுதி இயக்கி ஹீரோ வாகவும் நடிக்கும்’அறுவடை’யில்  கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். இவர்களுடன் பருத்திவீரன் சரவணன்,  ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர்  நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு: ஆனந்த் இசை: ரகு ஸ்ரவண் குமார்,  படத்தொகுப்பு :கே .கே . விக்னேஷ். பாடல்கள்:  கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி.

கோயம்புத்தூரில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பு நிறைவடைந்து.

படத்தைப் பற்றி கார்த்திகேசன்

”ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை,  மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிட்டிருக்கிறோம்.  விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் ” என்கிறார்.

—    ஜெடிஆர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.