‘சிறை’ சூப்பர் ஹிட்டும் லலித்குமாரின் சூப்பர் ஸ்பீடும்!

2025 டிசம்பர் கடைசியில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்த ‘சிறை’ மூலம் தனது மகன் எல்.கே.அக்‌ஷய்குமாரை ஹீரோவாக்கினார். ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ எஸ்.எஸ்.லலித்குமார். இப்போது தனது பேனரின் 13-ஆவது தயாரிப்பிலும் அக்‌ஷய்குமாரை ஹீரோவாகப் போட்டு ஷூட்டிங்கையும் செம ஸ்பீடாக நடத்தி வருகிறார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தை விக்னேஷ் வடிவேல் என்ற புதியவர் இயக்குகிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா சர்மா, ஜாபர் சாதிக், நோபல் ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன், ஷாரீக் ஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். லலித்குமாரின் இன்னொரு மகனான எல்.கே.விஷ்ணுகுமார் இணைத் தயாரிப்பாளராகியிருக்கிறார்.

ஒளிப்பதிவு : லியோன் பிரிட்டோ, இசை : ஜென் மார்ட்டின், எடிட்டிங் : பரத் விக்ரமன், ஆர்ட் டைரக்டர் : பி.எஸ்.ஹரிகரன், காஸ்ட்யூம் டிசைனர் : பிரியா, நிர்வாகத் தயாரிப்பாளர்கள் : கே.அருண், மணிகண்டன், பி.ஆர்.ஓ.: யுவராஜ்.

   —   ஆண்டவர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.