‘சிறை’ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், ‘டாணாக்காரன்’ டைரக்டர் தமிழ் கதை எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள ‘சிறை’ படம்
டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது . அதனால் படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “மின்னு வட்டம் பூச்சி” பாடல் நேற்று (டிச.16) விஐடி கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் வெளியிட்டப்பட்டது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் சங்கர் ராஜா குரலில் உருவாகியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பத்மஜா ஶ்ரீனிவாசன் இப்பாடலை பாடியுள்ளார்.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார். இப்படத்தில் அறிமுகமாகும் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எல்.கே. அக்ஷய் குமாருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.
— ஜெ.டி.ஆர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.