அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விடியல் தருவதாக சொல்லிட்டு இப்படி தவிக்க விடலாமா?

திருச்சியில் அடகு நகையை விற்க

அப்பா 1694 நாளாக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வாக்குறுதியை வஞ்சிக்கலாமா?

12 ஆயிரம் குடும்பங்களை முன்னேற்றாமல் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என சொல்லலாமா?

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விடியல் தருவதாக சொல்லிட்டு இப்படி தவிக்க விடலாமா? என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் அறிக்கையில் தொிவித்துள்ளது என்னவென்றால்,

முன்னாள் முதல்வராக இருந்த கலைஞரும், இந்நாள் முதல்வர் ஸ்டாலினும் பகுதிநேர ஆசிரியர்களை திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வதாக தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தார்கள்.

Admission Enquiry Form

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த 56 மாதங்களில் இன்னும் பணி நிரந்தரம் வாக்குறுதியை பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிறைவேற்றாமல் வஞ்சிப்பது கொஞ்சமும் நியாயம் இல்லை.

திமுக வாக்குறுதி
திமுக வாக்குறுதி

திமுக வாக்குறுதியை நம்பி வாக்களித்து இன்று திமுக ஆட்சி நடப்பதற்கு ஒரு காரணமாக இருந்த பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் நன்றி கடனாக பணி நிரந்தரம் செய்து இருக்க வேண்டும்.

ஆனால் பணி நிரந்தரம் செய்ய வில்லை என்பதால் தமிழ்நாடு முழுவதும் பணிபுரிகின்ற 12 ஆயிரம் பேர் போராடி வருகின்றார்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

15 ஆண்டுகளாக தற்காலிகமாக வேலை செய்வதால் அரசு சலுகைகள் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இன்றைய விலைவாசி உயர்வில் வெறும் 12,500 ரூபாய் சம்பளத்தில் குடும்பத்தின் அடிப்படை தேவைகளை செய்தி கொள்ள முடியாமல் பரிதவித்து நிற்கின்றார்கள்.

எனவே காலமுறை சம்பளம் வழங்கி பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே இனி எஞ்சிய காலத்தை நல்லபடியாக வாழ முடியும்.

முதல்வராக இருக்கின்ற ஸ்டாலின் தன்னை தாயுமானவர், அப்பா என்றும், கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்றுவார் என்றும், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்றும் சொல்வதற்கும், அடுத்த தேர்தலுக்கு அறிக்கை தயாரிக்க குழு அமைத்ததற்கும் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.

மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார்

அதற்கு பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

சட்டசபை ஆட்சி காலத்திற்கான 1825 நாட்களில் 1694 நாட்கள் முடிந்து விட்டது. மீதி உள்ள 131 நாட்களே இருக்கிறது. அதில் அடுத்த சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவித்தாலே தேர்தல் கமிஷன் கைக்கு அதிகாரம் போய்விடும் என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்காது.

அதற்குள் அப்பா என்ற சொல்லுக்கு அர்த்தமாக முதல்வர் ஸ்டாலின் 12 ஆயிரம் குடும்பங்கள் வாழ பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.