சிவகார்த்திகேயனும் அவரது சமீபத்திய திடீர் தளபதி சரச்சைகளும்….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிவகார்த்திகேயன் அண்மையில் இளம் திறமையாளர்களை பாராட்டுவது சிலரால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. போலியாக நடிக்கிறார், ரஜினியாக முயற்சிக்கிறார் என ஏகப்பட்டட்றோல்கள்.

உண்மையில் எனக்கு நேரில நடந்த சில சம்பவங்களை குறிப்பிடுகிறேன்.

Sri Kumaran Mini HAll Trichy

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சம்பவம் 1 – எனக்கு ரஜினி முருகன் படத்துக்காக இண்டர்வியூ எடுத்துதான் அவருடன் நேரடி தொடர்பு கிடைத்தது. இண்டர்வியூவில் நம்பர் பகிரும் பலரும் மீண்டும் பேசக்கூட மாட்டார்கள் ஆனால் சிவா அதன் பின் பல நிகழ்ச்சிகளை பார்த்து நிகழ்ச்சி குறித்து கருத்தை அனுப்புவார். இதெல்லாம் ஒரு செலிபிரிட்டியாக பீல் பண்ணுகிறவர்கள் செய்ய மாட்டார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதற்கும் மேலே எனக்கு 2017ல் விபத்து நடத்த செய்தி அறிந்து தொடர்பு கொண்டு விசாரித்தார். குணமடைந்ததும் நேரில் அழைத்து அவரது கைகளால் பரிமாறி உபசரித்தார். இடையில் சில மியூச்சுவல் ப்ரெண்ட்ஸிடமும் நலம் விசாரித்தார். இது எதுவுமே அவர் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனாலும் செய்தார்.

Flats in Trichy for Sale

சம்பவம் 2 – கடந்த ஆண்டு ஒரு நண்பனின் மனைவிக்கு உடல் நலம் இல்லை என வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்தேன். அவரின் மருத்து செலவுகளில் 4ல் ஒரு பங்கை ஏற்றுக்கொண்டு அவரது குடுப்பத்தை அவரது நண்பர் நவநீதனை கொண்டு தொடர்ந்து விசாரிக்கவும் செய்தார்.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் முபா
நடிகர் சிவகார்த்திகேயனுடன் முபா

சம்பவம் 3 – எனது கல்யாண வரவேற்பிற்கு வருவதாக சொல்லி இருந்தார். அதே நாளில் லைகா நிறுவனரை சந்திக்க அழைப்பு. சூழலை என்னிடம் சொல்லி சமாளிக்க கூறினார். நான், நீங்கள் வந்து தான் ஆக வேண்டும் என அடம்பிடிக்க சில நிமிடம் வருவதற்கு ப்ளைட் டிக்கெட் புக் செய்து வந்து போனார்.

இது எதுவுமே அவர் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் செய்கிறார். அவரை ஒரு எளிய மனிதாக வைத்துக்கொள்ள முயல்கிறார். அப்படித்தான் வளர்ந்து வரும் திறமைகளை பாராட்ட நினைக்கிறார். எல்லோருடைய தொடர்பிலும் இருக்க நினைக்கும் நல்ல மனிதர்களை நோகடிக்கும்போது போங்கடா என தான் உண்டு வேலை உண்டு என சென்றுவிடுவார்கள். அப்படித்தான் அஜித் சென்றார்.

நான் இதை எழுத காரணம், எனக்கு நல்லவராக இருந்த ஒருவரை ஊரே கிண்டலடிக்கும் போது என்னாலும் அதை பார்த்து சிரிக்க முடியவில்லை…

 

—      முபா.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.