கல்லூரி மாணாக்கர்களுக்கு அரசு நலதிட்டங்கள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் !
திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு சார்பாக சமூக பணியில் ஈடுபடும் கல்லூரி மாணாக்கர்களுக்கு அரசு நலதிட்டங்கள் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி கல்லூரி சமூதாயக்கூடத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச தலைமையில் வணிகவியல் புலத்தலைவர் முனைவர் ஜூலியஸ் சீசர் செப்பர்டு விரிவாக்கத்துறை திட்டச் செயல்பாடுகள் மாணாக்கர்களின் சமூக அறிவையும் அக்கறையையும் திறன் மற்றும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் சமூக முன்னேறத்திற்கு தம்முடைய பங்களிப்பையும் அளிக்க வாய்ப்பாக அமைகிறது என்று கூறினார்.
விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தமது தொடக்கவுரையில் மாணவர்கள் சமூகப்பணியில் ஈடுபடுவதால் தங்களின் எண்ணத்தையும் ஆர்வத்தையும் இச்சமூக மற்றும் கல்வி விழிப்புணர்வு பணி தூண்டுகிறது இதன் மூலம் சமூக மேம்பாடு அடைய எளிதாகிறது என்று எடுத்துரைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு முத்த பட்டியல் வழக்கறிஞர்கள் கங்கை செல்வன் மற்றும்; Pலா தங்களது கருத்துரையில் ஏழை எளிய மக்களும் தங்களின் வாழ்வாதாரத்திற்கும் உரிமைகளுக்கும் சட்ட தீர்வுகளுக்கும் அரசின் இலவச உதவி சட்ட பணிகள் ஆணைக்குழு உதவுகிறது இவ்வாய்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.
திருச்சி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை பாலின சிறப்பு வல்லுநர் திரு அருள் ராபர்ட் குழந்தைகள் பெண்கள் அனைத்து பாலினர் மற்றும் முதியோர்களுக்கான அரசு நலத்திட்டத்தின் பயன்களை மாணவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து எளிதில் பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று கூறினார்.
ஈயூக்விட்டாஸ் நிறுவன சமூகப்பணி அலுவலர் திரு சுகுமாரன் சமூகத்தில் ஏழை எளிய மக்கள் தங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு முறையான பயிற்சியையும் நிதி உதவியையும் ஏற்படுத்தி முன்னேற இவ்வாய்ப்புகளை மாணாக்கர்களும் மக்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு எடுத்துரைத்தார்.
விரிவாக்கத்துறையின் முதுநிலை ஒருங்கிணைப்பாளர்கள் திரு ஜெயச்சந்திரன் மற்றும் திரு லெனின் உலகளாவிய நிலையான நீடித்த வளர்ச்சிக்கு பதினேழு இலக்குகளை சமூதாய பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதன் மூலம் நாடு தன்னிறைவு பெறும் என்று விளக்கி கூறினார்கள்.
இளநிலை ஒருங்கிணைபாளர் திரு சுதாகர் அறிக்கை தயார் செய்யும் வழிமுறைகளையும் அதனை இணையதள வழியில் சமர்பிக்கும் முறைகளையும் எடுத்துக் கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயசீலன் வரவேற்றார் முடிவில் ஒருங்கிணைப்பாளர் திரு ஜோசப் கிறிஸ்து ராஜா நன்றி கூறினார் திருமதி யசோதை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் திருமதி யசோதை செய்திருந்தார் மேலும் தொழில் நுட்ப உதவிகளை உதவியாளர் திரு அமலேஸ்வரன் செய்திருந்தார்.
பணிமுறை ஒன்று மற்றும் இரண்டின் சமூக மேம்பாட்டு குழு மாணாக்கர்கள் 250 க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் அரசு நலத்திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி பற்றிய கண்காட்சி நடைபெற்றது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.