வி.சே. பெர்த் டே ஸ்பெஷல் !
தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘ஸ்லம் டாக் 33– டெம்பிள் ரோடு’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தை ‘பூரி கனெக்ட்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஜே.பி. நாராயண்ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று ( ஜனவரி 16) படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்ட நிலையில் இப்படமானது தனது திரை வாழ்க்கையில் இதுவரை முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார் விஜய் சேதுபதி.
படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மேலும், பிரம்மாஜி மற்றும் விடிவி கணேஷ் காமெடிக்கு க்யாரண்டி. தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
*தொழில் நுட்பக் குழு*
வழங்குபவர் : சார்மி கௌர்
இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
சிஇஓ : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.