எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் என்ற பெயரில் மோசடி !

இதுபோல் தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. விஜய் கிருஷ்ணன் மற்றும் சாந்தினி ஆகியோரை கைது செய்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் என்ற பெயரில் மோசடி ! பாதிக்கப்பட்டவர்கள் புகார் !

திருச்சியைச் சேர்ந்தவர் விஜய்கிருஷ்ணன் இவரது மனைவி சாந்தினி இருவரும் மதுரை கே.கே நகரை தலைமையிடமாக கொண்டு, எஸ்.எம்.சி. கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் என்ற நிறுவனம் நடத்தி வந்தனர் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் 40-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வந்த இந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி இருவரும் முதலீட்டாளர்களின் பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக அந்நிறுவன பணியாளர்கள் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது;

எஸ்எம்சி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் என்ற நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் அலுவலக பணியாளர்கள் துவங்கி மேலாளர்கள் வரை அனைவரிடமும் ரூ2 லட்சம் முதல் 5 லட்சம்  வரை வசூலிக்கப்பட்டு பணி வழங்கப்பட்டது. மேலும் பணியாளர்களுக்கு மாதாந்திர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புதிய முதலீட்டாளர்கள் சேர்க்கப்பட்டனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களும் முதலீடு செய்திருந்ததால் அவர்களை நம்பி வாடிக்கையாளர்களும் தினசரி, வாராந்திர சேமிப்பு, நிரந்த வைப்பு கணக்கு மற்றும் மாத வருமான திட்டம் என பல்வேறு விதமான கணக்குகளில் பல லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர் இதற்காக முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாண்டு பத்திரங்களும் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் முதலீடு செய்த பணத்திற்கான வட்டி தொகையும், ஊழியர்களுக்கான நான்கு மாத ஊதியமும் வழங்கப்படாமல் இருந்தது மதுரையில் உள்ள நிறுவனத்தின் கிளை அலுவலகங்களும் மூடப்பட்டன. வாடிக்கையாளர்கள் நேரில் சென்று விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.

இவ்வாறு மதுரை மண்டலத்தில் உள்ள 10 கிளைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை சேர்த்து 10 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதுபோல் தமிழகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. விஜய் கிருஷ்ணன் மற்றும் சாந்தினி ஆகியோரை கைது செய்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரை பெற்ற போலீசார் விசாரிக்கின்றனர்.

– ஷாகுல், படங்கள் : ஆனந்த்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.