கல்லூரி மாணாக்கர்களுக்கான சமூகப்பணியில் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டுக் கருத்தரங்கு !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு உன்னத் பாரத் அபியான் சார்பாக சமூகப்பணியில் கல்வி விழிப்புணர்வு செயல்பாட்டுக் கருத்தரங்கு கல்லூரி சமூதாய மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் அருள்முனைவர் மரியதாஸ் சே ச தலைமையில் பணியமர்வு இரண்டின் துணை முதல்வர் திரு ஆன்டோனி திவாகர் சந்திரன் சமூகப்பணியில் ஈடுபடும் மாணாக்கர்கள் செயல்பாடுகளில் பயனுள்ளதாகவும் கற்றல் அறிவு மேம்படவும் அறிவில் நோக்கோடு செயல்படவேண்டுமென்று எடுத்துக்கூறினார்.

விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே ச தமது தொடக்கவுரையில் மாணவர்கள் சமூகப்பணியில் ஈடுப்படுவதால் அவர்களின் செயல்பாடு தங்களின் திறன் திறமைகளை வளர்த்துகொள்ளவதோடு கிராமங்களின் வளர்ச்சிக்கும் மற்றும் நிலைத்த நீடித்த செயலாக இருக்க வேண்டுமென்று கூறினார்.
விரிவாக்கத்துறையின் முது நிலை ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயச்சந்திரன் உலகளாவிய நிலையான நீடித்த வளர்ச்சிக்கு பதினேழு இலக்குகளை சமூதாய பணிகளில் செயல்படுத்துவதன் மூலம் நாடு தன்னிறைவு பெறும் என்று விளக்கி கூறினார்.
கல்வி பற்றி விழிப்புணர்வு குறித்து திருச்சி கிரியா குழந்தைகள் அகடாமி மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகி திரு ஜான்பீட்டர் சமூக மாற்றத்திற்கு இளம்பருவத்தினராகிய கல்லூரி மாணாக்கர்கள் படைப்பு திறனோடும் சமநிலை நோக்கும் கண்ணோட்டதோடும் ஈடுபடும் சமூக செயல்பாடுகளே மாற்றத்திற்கான வழிமுறையாகும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் திருமதி பிரியதர்ஷினி கல்லூரி மாணாக்கர்கள் கல்வி சமூகப்பணியில் ஈடுப்படும் போது சமூக சூழலையும் குழந்தைகளின் உடல் மற்றும் மனநலம் அறிந்து அவர்களின் உரிமைகளையும் எடுத்துக்கூறி எதிர்கால சமூகம் நல் சமூகமாக மாற்றம் பெற வழிவகுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இளநிலை ஒருங்கிணைபாளர்கள் திரு ஜெயசீலன் மற்றும் திரு சுதாகர் அறிக்கை தயார் செய்யும் வழிமுறைகளையும் அதனை இணையதள வழியில் சமர்பிக்கும் முறைகளையும் எடுத்துக் கூறினார்கள்
முதுநிலை ஒருங்கிணைப்பாளர் திரு ஜோசப் கிறிஸ்து ராஜா வந்தவர்களை வரவேற்றார் முடிவில் இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு சுதாகர் நன்றி கூறினார். திருமதி யசோதை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் திரு லெனின் திரு ஜோசப் கிறிஸ்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர். மேலும் தொழில் நுட்ப உதவிகளை இளநிலை உதவியாளர் திரு அமலேஸ்வரன் செய்திருந்தார். கல்வி விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த விளக்கப்பட கண்காட்சி நடைபெற்றது.
பணிமுறை ஒன்று மற்றும் இரண்டின் கல்வி குழுவின் மாணாக்கர்கள் 400க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.