சௌடாம்பிகா வேர்ல்டு ஸ்கூல் : தமிழகத்தின் முன்மாதிரி செயற்கை விளையாட்டு மைதானம் நம்ம திருச்சியில் !
திருச்சி எம்.எம். நகரில் செயல்பட்டு வரும் சர்வதேச தரத்திலான கல்வியை வழங்கிவரும் கல்வி நிறுவனமான “சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீ ஸ்கூல்” பள்ளியில் “மல்டி ஸ்போர்ட்ஸ் அரேனா” என்ற பெயரில் அமையப்பெற்ற ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கத்தை, திருச்சி சரக காவல் துணைத்தலைவர் டாக்டர் வி.வருண்குமார் ஐ.பி.எஸ் துவக்கி வைத்தார்.
கடந்த மார்ச் 7 அன்று நடைபெற்ற இவ்விழாவில், சௌடாம்பிகா கல்விக் குழும தலைவர் டாக்டர் எஸ். ராமமூர்த்தி. செயலாளர் செந்தூர் செல்வன், கல்வி இயக்குனர் சிவகாமி விஜயகுமார், முதல்வர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலேயே மிகப்பெரிய அளவில் 21,000 சதுரடி அளவுடன் 3 அரங்குகளுடன் 5 மற்றும் 9 பேர் குழு விளையாடும் செயற்கை கால்பந்து மைதானம்; இரண்டு சிந்தடிக் தளம் கொண்ட டென்னிஸ் மைதானம்; இரண்டு சிந்தடிக் தளம் கொண்ட கூடை பந்து மைதானம்; ஒரு சிந்தடிக் ஸ்கேடிங் ரிங் ; ஒரு சிந்தடிக் கைபந்து மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றிய, டி.ஐ.ஜி. வருண்குமார்,

“உடலையும் எண்ணத்தையும் ஆரோக்யமாக வைத்துக் கொள்வதற்கு விளையாட்டு அவசியம். மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும்.” என்பதாக பேசினார்.
“சௌடாம்பிகா மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி, சிபிஎஸ்இ பாட வழித்தடத்தில் திருச்சியிலேயே முதன்மை பள்ளியாக திகழ்ந்து வருகிறது முதன்மையாக இருப்பதுடன் உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டிலும் உலகத்தரத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இங்கு 25 மீட்டர் உட்புற நீச்சல் குளம், 400 மீட்டர் ஓட்டப்பந்தய பாதை வசதிகளுடன் தற்போது மேலும் மாணவர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்த நவீன பல் விளையாட்டு அரங்கம் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், நான்காம் வகுப்பு முதல் மாணவ மாணவியர்களுக்கு சுவைமிக்க உணவுகளுடன் ஹாஸ்டல் வசதிகள் இருக்கிறது இதன் மூலம் மாணவர்கள் இப்பள்ளியின் கல்வி வசதிகளுடன் விளையாட்டு வளர்ச்சியையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் உலகத் தரத்திலான கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் தருகிறோம் எனவே, வரும் கல்வி ஆண்டில் இருந்து இப்பள்ளியின் பெயர் “சௌடாம்பிகா வேர்ல்டு ஸ்கூல்” என்று மாற்றப்படும் ” என்பதாக தெரிவிக்கிறார், பள்ளியின் செயலாளர் செந்தூர் செல்வன்.