பெண் காக்கிகளிடம் எரிந்து விழும் எஸ்பி
பெண் காக்கிகளிடம் எரிந்து விழும் எஸ்பி
திருவாரூர் மாவட்ட எஸ்பி கடும் கறார் பேர்வழி என்றாலும் உதவி செய்யாவிட்டாலும் உபத்ரவம் செய்யக்கூடாது என மாவட்ட காக்கிகள் கொத்தளிக்கின்றனர். காவலர்கள் பற்றாக்குறையாக உள்ள காவல் நிலையங்களில் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார். மேலும், இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கப்பட்டதாக அரசு வாகனத்திற்கு மாதம் 80 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. இதில் பந்தோபஸ்து மற்றும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் போது ஒதுக்கீடு செய்யப்படும் டீசல் போதுமானதாக இல்லை எனக் கூறி கூடுதலாக டீசல் டோக்கன் கேட்கும்போது அதெல்லாம் முடியாது.
ஒதுக்கீடு செய்த அளவிற்குள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என பொரிந்து தள்ளுகிறார். இதனால் மிரளும் இன்ஸ்பெக்டர்கள் வேறுவழியின்றி சொந்த செலவில் டீசல் நிரப்பிக் கொள்கின்றனர். எஸ்பி நினைத்தால் கூடுதல் டோக்கன் வழங்கலாம். ஆனால் வழங்க மறுத்து எரிந்து விழுகிறார். ஆண்கள் என்றில்லாமல் பெண் இன்ஸ்பெக்டர்களிடமும் இதே பாணியை தொடர்கிறார். இதை எல்லாம் எங்கே போய் கூறுவது என தெரியாமல் காக்கிகள் கைகளை பிசைந்து வருகின்றனர்.