உடல் நலனில் வேணும் தனி கவனம் !

ஜாலியா படிக்கலாம் வாங்க ! பாகம் 08

முழு ஆண்டு தேர்வு நெருங்கிருச்சு. இதுவரை போனது போகட்டும். இருக்கிற நாளில் எப்படி கொஞ்சம் பயனுள்ள வகையில் படிக்கலாம்னு யோசிப்போமே. தினமும் அதிகாலை 4.30 மணிக்கு சுறுசுறுப்பாக எழுந்து விடுங்கள். படிக்கிறது, படிச்சத திருப்பிப் பார்க்கிறது எல்லாம் காலையில தீர்மானிச்சுக்கங்க. எழுதி பார்க்கிறது, எழுத்து வேலையெல்லாம் மாலைனு வச்சிக்கோங்க. இந்த நேரத்தை மாத்திராதீங்க, ரொம்ப கவனம். படிப்பதற்கு காலை அதுவும் அமைதியான அந்த அதிகாலை நேரம்தான் ரொம்ப ரொம்ப முக்கியம். சுற்றுப்புறமும் அமைதியா இருக்கும். கூடவே, நம்ம மனசும் போதுமான ஓய்வுக்குப்பிறகு அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும். படிக்கும் பாடம் அப்படியே நம் நினைவில் நங்கூரமாக தங்கிவிடும்.
இதையெல்லாம்விட ரொம்ப முக்கியம். உங்கள் உடல் நலனில் தனி கவனம். இன்னும் இவ்வளவு படிக்க வேண்டுமே என்ற பயத்தில், கண்ட நேரத்திற்கு எழுந்து, கண்ட நேரத்திற்கு தூங்கினால் உடல் நலன்தான் கெடும். நிதானமாக திட்டமிடுங்கள். உறக்கத்தில் மட்டுமல்; உணவு விசயத்திலும் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள். தேர்வு முடியும் வரையில் உங்களை எந்த ஒரு நோயும் அண்டாத அளவுக்கு உடலை தயார் படுத்தி வைத்திருங்கள்.

—  பேரா சா அருள்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.