அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அமைச்சா்கள் தொடங்கி வைத்த நலன் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் சார்பில் மாநகராட்சி 45 வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஏழை எளிய பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை பெறுவதற்கும் ஏதுவாக தமிழக முதல்வர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் நலம் தாக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் தமிழகம் முழுவதும் நடத்த அறிவுறுத்தி உள்ளார் அதன்படி நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விதமான மருத்துவர்களை கொண்டு பொதுமக்களுக்கு தேவையான மருத்துவர் பரிசோதனை ஆலோசனை மற்றும் மேற்சிகிச்சைக்கான பரிந்துரைகளும் செய்யப்படுகின்றனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மருத்துவ முகாம்மேலும் இதனை அடுத்து திருச்சி மாநகராட்சி மண்டலம் 3 க்குட்பட்ட பொன்மலை பகுதி 45 வது வார்டில் உள்ள அரசு உதவி பள்ளியில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருதவ முகாமில் பொது மருத்துவம் , காது, மூக்கு, தொண்டை, இதயவியல் ,கண், பல், மனநலம் உள்ளிட்ட 17 வகையான மருத்துவர் துறையைசேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவஆலோசனை பரிசோதனை மற்றும் வேர் சிகிச்சைக்கான அறிவுரைகளை வழங்கினர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இந்த நிலையில் முன்னதாக முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு கால பெட்டக 10 பேருக்கும், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை 5 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம்மேலும் இந்த முகாமில் மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் தர்மராஜ், ரமேஷ்,  சீதாலட்சுமி முருகானந்தம், பியூலாமாணிக்கம், சுரேஷ்,திருச்சி மாநகராட்சி நகர் நில அலுவலர் சுபாஷ் காந்தி சுகாதார அலுவலர் தலைவிரிச்சான் உதவி நகர் நல அலுவலர் எழில் நிலவன் மற்றும் மண்டலம் 3 ன்  உதவி ஆணையர் சரவணன் உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜ்குமார் ஜனனி மணிகண்டன் அப்புராஜ் ரமிலா உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பேட்டி

தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு மக்கள் நல்வாழ்வுத் துறையில்  பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மக்களை தேடி மருத்துவம் , இன்னுயிர் காப்போம்,  நம்மைக் காக்கும் 48, இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், தொழிலாளர்கள் தேடி மருத்துவ திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் 14 வயது பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஹெச்பிவி என்று சொல்லக்கூடிய தடுப்பூசியை போடும் அணி துவக்கி வைத்தார். இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் முதன்முறையாக மகளிர் காக்கும் முயற்சி  திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில்  உலகிலேயே  குழந்தைகளுக்கான உயர் சிகிச்சை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மருத்துவ முகாம்14.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணர ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மானது பொதுவாக இது மற்ற மருத்துவ முகாம்களைப் போல் அல்லாமல் முகாமுக்கு சென்றால் முழு உடற்ப பரிசோதனை என்கின்ற அளவில் அமையப்பட்டுள்ளது.. இத்திட்டம் தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி இன்று வரை தமிழகத்தில் 1076 முகாம்கள் நிறைவுள்ளது.  மீதம் இருக்கக்கூடிய முகாம்கள் பிப்ரவரி மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதுவரை இந்த முகம் மூலம் 16,16,517 பேர் பயனடைந்துள்ளனர். நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் ஆனது திருச்சி மாவட்டத்தில் 35 வது முகாமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இன்று பொன்மலை பட்டியில் மற்றும் தும்பலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை திருச்சி 54ஆயிரத்து 405பேர் பயனடைந்து இருக்கிறார்கள்.

திருச்சி பொன்மலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த முகாமினை நானும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரும் பார்வையிட்டு தொடங்கி வைத்துள்ளோம்.

தமிழக அரசு பொறுப்பு ஏற்பதற்கு முன்பு 17 அரசு தலைமை மருத்துவமனைகள் இருந்தன.

வருகின்ற ஆறாம் தேதி தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையைய காணொளி மூலமாக தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார். ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, குளித்தலை, காங்கேயம் மற்றும் திண்டிவனம் ஆகிய ஏழு இடங்களில் அரசு தலைமை மருத்துவமனை திறந்து வைக்கப்பட உள்ளது.

இது மட்டுமல்லாது நூற்று நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டுக்கோட்டை, கம்பம்,  கொடைக்கானல், ஆலங்குளம், பெரியகுளம், சங்கரன்கோயில்,  உத்தமபாளையம், முசிறி, குற்றாலம், ஜல்லிபட்டு செஞ்சி வேப்பூர் திருக்குவளை கும்மிடிப்பூண்டி கிருஷ்ணாபுரம் திருவாடானை கடலாடி கோத்தகிரி கண்ணூர் விருத்தாச்சலம் பண்ருட்டி நிலக்கோட்டை ஆகிய 23 ஊர்களில் மருத்துவ கட்டிடங்கள் திறக்கப்பட உள்ளது.

மருத்துவ முகாம்மேலும் 10 இடங்களில் கட்டப்பட்டுள்ள ரூ11.70 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட உள்ளது .

ரூ9.91 கோடி மதிப்பீட்டில் கிண்டி உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் புதிய நுண்ணுயிரியல் ஆய்வகம் திறக்கப்படவுள்ளது.

அன்றைக்கு ஒரே நாளில் மருத்துவ துறை வரலாற்றில் 359.46 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டிடங்களை மாண்புமிகு தமிழக முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

திருச்சியை பொருத்தவரை தொடர்ந்து ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் 110 கோடி செலவிலான மருத்துவ கட்டிடங்களும். , 25 கோடி ரூபாயில் மருத்துவ உபகரணங்களும் பொருத்துகிற பணிகள் நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு ஐந்து இடங்களில் புற்றுநோய்க்கான பெட் சிடி ஸ்கேன் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக புற்றுநோய்க்கான மிகப்பெரிய பெட்சிடி ஸ்கேன் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.