அங்குசம் சேனலில் இணைய

பட்டுக்கு கேரண்டி இளம்பிள்ளை, தற்போது கல்விக்கும் கேரண்டி ….. பள்ளிகல்வித்துறை அமைச்சர்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பட்டுக்கு கேரண்டி இளம்பிள்ளை; தற்போது கல்விக்கும் கேரண்டி கொடுக்கிறது.

ஒழுக்கம்,கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பு திமுகவின் வழங்குகிறது என்று பேசினார்கள்.  அண்ணா சொன்னது ஒரு இயக்கத்திற்காக சொல்லிய கருத்துக்கள் அல்ல; ஒட்டுமொத்த ஒரு இனத்திற்காக  எப்படி கட்டுப்பாடாக, ஒழுக்கமாக, கண்ணியமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை எங்கு வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம் அனைத்திற்கும் பொருந்தும்…

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தமிழக முதலமைச்சர் கட்டடங்களை மேம்படுத்துவதற்காக பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் மூலமாக 7500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வகுப்பறைகளை தமிழக முழுவதும்  கட்டப்பட்டது கொண்டு இருக்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நான் முதல்வன் திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.

எனக்கான பெருமை அரசு பள்ளியில் பயின்ற சேலம், விருதுநகர் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் ஐஐடியில் சேர்ந்துள்ளார்கள். இது அரசுப் பள்ளிக்கான பெருமை என்றும் பேசினார்.

படிக்கின்ற வயதில் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்; படியுங்கள் படிப்பிற்கு எது தடையாக வந்தாலும் முதல்வர் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Best govt school in Andhra with highest strength of 3,316 students for well-rounded education - VSK Telanganaஅரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்  நிரூபிக்கின்ற வண்ணம் தான் ஒவ்வொரு செயலும் நடைபெற்று வருகிறது.

ஆசிரியர்கள் நம்முடைய இரண்டாவது பெற்றோர். தங்களது சொந்த பிள்ளை வளர்ப்பதைக் காட்டிலும், வகுப்பறையில் உள்ள 40 பிள்ளைகளும் நன்றாக வர வேண்டும் என்று நினைப்பது ஆசிரியர் இனம் தான்.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

ஆசிரியர்கள் மாணவர்களிடம் அறிவுரை கூறி, கண்டிப்பாக இருக்கிறார்கள் என்றால் அது தனிப்பட்ட கோபம் அல்ல, மாணவர்கள் மீது உள்ள அக்கறை.

பள்ளியை முடித்துவிட்டு அடுத்தடுத்த இடங்கள் போகும்போது சமுதாயம் எப்பொழுது வழுக்கி விடுவார்கள்; அந்த இடத்தை எப்பொழுது நிரப்பலாம் என்று தான் காத்திருக்கும். அப்போது நல்லது, கெட்டது சொல்வதற்கு கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள்… இப்பொழுது ஆசிரியர்கள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு, நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும்.

பள்ளியை முடித்துவிட்டு அதிக மதிப்பெண் பெற்றுக்கொண்டு செல்வது மட்டும் பெருமை கிடையாது; நல்ல மாணவன் என்ற பெயர் எடுத்துக் கொண்டு பள்ளியை விட்டு செல்வதுதான் பெருமை. இந்தப் பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது.

பெற்றோர் மிகுந்த சிரமத்திற்கு இடையே குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்; அவர்கள் கஷ்டத்தை வெளியே சொல்லமாட்டார்கள். எனது மகன் படித்து முடித்து நல்ல இடத்திற்கு வருவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.  மாணவர்கள் அறிவுரைகளை உள்வாங்கிக் கொண்டு நல்லபிள்ளைகளாக வளருங்கள் என்றும் கூறினார்.

நம்முடைய பிள்ளைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது; நம்ம பிள்ளைகளின் திறமையை கண்டறிவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு தான்… மற்ற மாணவர்களை ஒப்பிட்டு பேசுவதை  விட்டுவிட்டு உங்கள் பிள்ளைகளுக்கு என்ன திறமைகள் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்

மாணவர்களின் திறமைகளை கண்டறிவதற்காக கலை நிகழ்ச்சிகள் அரசு பள்ளிகளில் அதிகம் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வரப்பட்டுள்ளது..அவர்கள் திறமையை கண்டறிந்து வளர்த்திருக்கிறோம்என்று தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

மாணவர்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு வாங்கி விட முடியாது குறைந்த மதிப்பெண்ணில் வெற்றி பெறும் மாணவர்களின் திறமை, நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவரிடம் இருக்காது. அவர்களின் திறமையை கண்டறிய வேண்டுவது நம்முடைய கூட்டுப் பொறுப்பாக அமைய வேண்டும்.

தமிழக அரசால் பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வரப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய என்ற நோக்கில் பள்ளி கல்வி துறையில் வேண்டும் என்பதற்கு 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடி கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்துள்ளார்.

தமிழகத்தில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறையாக பள்ளிகளை துறை இருந்து வருகிறது.

கல்வியையும் சுகாதாரத்தையும் இரண்டு கண்களாக பார்க்கின்ற முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.