பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு!
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 02.09.2025 ஆம் நாளன்றும் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 03.09.2025 ஆம் நாளன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்குதல்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவ்வறிவிப்பின்படி 2025-2026 ஆம் நிதியாண்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 02.09.2025 ஆம் நாளன்றும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு 03.09.2025 ஆம் நாளன்றும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவியர்களிடையே பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு காலையில் 10.00 மணி முதலும், கல்லூரி உள்ளன. மாணவ, நடைபெற மாணவர்களுக்கு பிற்பகல் 2.00 மணி முதலும் இப்போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை (செப்டம்பர் -15) முன்னிட்டு 02.09.2025ஆம் நாளன்று நடைபெறவுள்ள
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு
1)அண்ணாவின் தமிழ்வளம்,
2) மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.
3) பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்” எனும் தலைப்புகளிலும்,
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு
“1) தமிழும் அண்ணாவும்,
2) எழுத்தாளராக அண்ணா,
3) தென்னாட்டு பெர்னாட்ஷா எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை (செப்டம்பர் 17) முன்னிட்டு 03.09.2025 ஆம் நாளன்று நடைபெறவுள்ள
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு
“1) பெரியாரின் சமூகச் சீர்திருத்தங்கள்,
2) பகுத்தறிவு பகலவன்
3) சுயமரியாதை இயக்கம் எனும் தலைப்புகளிலும்,
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிக்கு
1) தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்,
2)உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும்,
3) தந்தை பெரியாரும், தமிழ்ச் சமுதாயமும் எனும் தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.
மேலும், பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குநர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும். அதே போன்று பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் தெரிவு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பப்பெற வேண்டும்.
கல்லூரி பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/-என்ற வகையிலும், பள்ளிப் பேச்சுப் போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். இது தவிர அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து அவர்களுக்கு சிறப்புப் பரிசாக ரூ.2000/- வீதம் வழங்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.