உலக சகோதரத்துவத்தைப் போற்றிய தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் உடன் இளைய தலைமுறை வீறு கொள்ள வேண்டும் –

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உலக சகோதரத்துவத்தைப் போற்றிய தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் உடன் இளைய தலைமுறை வீறு கொள்ள வேண்டும். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அறக்கட்டளை நிகழ்வில் பேராசிரியர் பாஸ்கரதாஸ் வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி தூயவளனார் கல்லூரி தமிழாய்வுத் துறையின் சார்பாக அருள் முனைவர் மேத்யூ ஜே மூலேல் சே.ச மற்றும் அருள் முனைவர் சி கே சுவாமி சே.ச ஆகியோரின் அறக்கட்டளைகள் சார்பாக சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

SVS வெறும் பிராண்ட் அல்ல - 4 தலைமுறை கடந்த பாரம்பரிய பிணைப்பு

நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வர் தந்தை அருள் முனைவர் ம ஆரோக்கிய சாமி சேவியர் சே.ச தலைமை வகித்தார். அவர் தம் தலைமையுரையில் கல்லூரியில் தமிழாய்வுத்துறை செய்யும் பல்வேறு பணிகளையும் முன்னேடுப்புகளையும் எடுத்துக்கூறி வாழ்த்தினார்.

தமிழாய்வுத் துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி தம் வாழ்த்துரையில், தமிழைப் படிக்க வந்த மாணவர்கள் தமிழை உலகுக்கு பரப்பியவர்களை பற்றியும் அறிந்து அதன் மூலம் அவர்களுடைய அறிவையும் தமிழ் ஆர்வத்தையும் வளர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

முதல்வர் தந்தை அருள் முனைவர் ம ஆரோக்கிய சாமி சேவியர் சே.ச
முதல்வர் தந்தை அருள் முனைவர் ம ஆரோக்கிய சாமி சேவியர் சே.ச

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

தொடர்ந்து தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஆ அடைக்கலராஜ் அவர்கள் அறிமுக உரையாற்றினார். சமய நல்லிணக்கம் மெய்யியல் நோக்கில் கிறிஸ்தவம் என்ற பொருண்மையில் சென்னை அன்னை வயலெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மொழி புலத் தலைவரும் மேனாள் கல்லூரி துணை முதல்வருமான முனைவர் யா.தா பாஸ்கரதாஸ் சொற்பொழிவு ஆற்றினார்.

தமிழின் நவீன வளர்ச்சிக்கும் பல மொழிபெயர்க்கப்படவும், அயலக இலக்கியங்கள் தமிழில் நிலைபெறும், அகராதிகள் உம், நிகண்டுகளும் உருவாகவும் முதன்மை காரணம் கிறிஸ்தவ மறை போதகர்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. கிறித்தவ சமய நூல்கள் மட்டும் அல்லாது பிற நூல்களையும் தொகுத்து, பாதுகாத்து, அச்சிட்டு சமய நல்லிணக்கத்தை நிலைநாட்டியவர்கள் ஐரோப்பியர்கள்.

 

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அறக்கட்டளை
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அறக்கட்டளை

அனைவரும் சமம் எனவும் வழிபடும் விதங்கள் மட்டுமே மாறுபடுகிறது என்பதை உணர்ந்து உலக சகோதரத்துவத்தைப் போற்றிய தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுடன் இளைய தலைமுறை வீறு கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நிகழ்வின் தொடக்கத்தில் இளங்கலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர் ஆ ஆல்வின் அமல்ராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வின் நிறைவில் இளங்கலைத்தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் சு கரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார். மூன்றாம் ஆண்டு மாணவர் மு. சண்முகநாதன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார், தமிழ் ஆர்வலர்கள், தமிழாய்வுத் துறை மற்றும் பிற துறை பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவர்கள் உட்பட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.

– ச ஆஷிக் டோனி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.