அரசியலிலும் சினிமா இருக்கிறது சினிமாவிலும் அரசியல் இருக்கிறது – மதுரையில் கவட்டை பட பூஜை – டாக்டர் சரவணன். !
மனித வாழ்க்கையே அரசியல் தான் அரசியலிலும் சினிமா இருக்கிறது சினிமாவிலும் அரசியல் இருக்கிறது என மதுரையில் நடந்த படப்பூஜை விழாவில் நடிகரும் மருத்துவருமான சரவணன்
மதுரை, பாண்டி கோவில் அருகே தனியார் திருமண மணடபத்தில் வைத்து கவட்டை திரைப்படத்திற்கான படபூஜை நடைப்பெற்றது.
இந்த திரைப்படத்தில் நடிக்கக்கூடிய குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான சரவணன் , சின்னத்திரை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து, நடிகர் யோகி உள்ளிட்டோர் பட பூஜையில் கலந்து கொண்டனர்.

படப்பூஜைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்த படத்தில் நடிக்கும் நடிகர் சரவணன் அரசியல் மட்டுமல்ல திரைப்படத்திற்கும் ஒரு களமாக அமைந்த ஒரு இடம் தான் மதுரை. அதனால் இன்று மதுரை பாண்டி கோவில் அருகே கவட்டை என்னும் திரைப்படத்திற்கான பூஜை நடத்தினோம்.
இந்த படத்தை பொறுத்தளவில் 70 மற்றும் 80களில் விளையாட கூடிய விளையாட்டுகளை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் மறந்து போன பண்டைய கால விளையாட்டுக்களை அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் மதுரையை சுற்றி இருக்கக்கூடிய மதுரையின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், மதுரையை சுற்றிலும் திரைப்படம் எடுக்க உள்ளோம் என்றார்.
தொடர்ந்து பேசியஅவர் இந்த படத்தில் கதாநாயகன் – கதாநாயகி என்று இல்லாமல் கதை தான் இதில் ஹீரோ
அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்த படம் அமையும் என்றும்,

மதுரை என்றாலே அரிவாள் கலாச்சாரமாக அனைவரும் பார்த்து வரக்கூடிய நிலையில் அதை மாற்றி மதுரையின் பாரம்பரிய விளையாட்டுக்கள், தமிழர்களின் விளையாட்டுகளை, கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடிய வகையில் படம் அமையும்.
மனித வாழ்க்கையே அரசியல் தான் அரசியலிலும் சினிமா இருக்கிறது சினிமாவிலும் அரசியல் இருக்கிறது என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த மதுரை முத்து: தன்னுடைய முழு பெயர் முத்து பாண்டி. எனது பெற்றோர்கள் இந்த பாண்டிக்கோவிலில் தான் இந்த பெயரை வைத்தார்கள் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மதுரை தமிழில் பேசினால் உடனடியாக நகைச்சுவை வந்துவிடும், அனைவரும் ரசித்து சிரித்து விடுவார்கள் என்றார்.

இன்று பூஜை போடப்பட்ட இந்தப் படம் 70 முதல் 80களில் விளையாடிய விளையாட்டுக்கள் இன்று இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு தெரியாமல் இருக்கக்கூடிய நிலையில் அவற்றை அவர்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக அமைய உள்ளது. உதாரணத்திற்கு கால் ரூபாய்க்கு ஜவ்வு மிட்டாய் வாங்கி அதில் வாட்ச் உள்ளிட்டவைகளை கட்டி மகிழ்ந்த காலம் முதல் திருடன் போலீஸ் விளையாடி கடைசியில் திருடன் போலீஸ் ஆக மாறும் இளமை கால விளையாட்டுகள் வரை இந்த படத்தில் இடம் பெற உள்ளன.
மதுரையின் கலாச்சாரம் மற்றும் விளையாட்டுகளை எடுத்துரைக்கும் வண்ணமாக இந்த படம் அமைய உள்ளது எனத்தெரிவித்தார்
வீடியோ லிங்