சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்-2023 கொண்டாட்ட விழா !

0

திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் தன்னாட்சிக்கல்லூரியின் விரிவாக்கத்துறை- செப்பர்டு; ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட சேவைகள் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி ஆகியவை இணைந்து சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்-2023 கொண்டாட்ட விழா கல்லூரியின் முதல்வர் தந்தை அருள்முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கல்லூரியின் சமூதாய மன்றத்தில் நடைபெற்றது.

சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து
சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து

இவ்விழாவில் விரிவாக்கத்துறையின் இயக்குநர் அருள்முனைவர் சகாயராஜ் சே.ச.  பேசும் போது… ஊட்டச்சத்து உணவுகளை சேர்த்து கொண்டால் எந்த நோய்களும் நம்மை தாக்காது என்று தனது தொடக்க உரையில் கூறினார். இவ்விழாவில் கல்லூரியின் இணை முதல்வர் முனைவர் ராஜேந்திரன் அவர்கள் தனது வாழ்த்துரையில் இன்றைய தலைமுறையினர் துரித உணவுகளை தவிர்த்து விட்டு பாரம்பரிய உணவுகளை தெரிந்து கொண்டு உணவு பழக்கவழக்கங்களை மாற்றி கொண்டால்தான் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைகள் உருவாகும் என்று கூறினார்.

திட்டம் இரண்டின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி கௌசல்யா  தனது கருத்துரையில் உலக அளவில் ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்தி உள்ளதையும் தேசிய மாநில மாவட்ட அளவில் அரசு எடுத்துள்ள முயிற்சியையும் முக்கியதுவத்தையும் இன்றைய தலைமுறையினர் உணர்ந்து நமது அன்றாட உணவு முறைகளில் சிறுதானிய உணவுகளை பழக்கப்படுத்தி உடல்நலம் காக்கவும் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைகள் உருவாக்கவும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.

சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து
சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து

உயிர் வேதியல் துறை பேராசிரியர் முனைவர் ஆண்டனி திவாகர் சந்திரன்  தனது சிறப்புரையில் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவை விட சிறுதானிய உணவு வகைகள் நன்றாக இயங்க வைக்கிறது என்று அறிவியல் பூர்வமாக எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியின் தலைவர் ரொட்டேரியன் மணிகண்டன் மேனாள் தலைவர் ரொட்டேரியன் பாலாஜி கணேஷ் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து இவ்விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்கள்.

இவ்விழாவில் கலந்து கொண்டவர்களை விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் லெனின் வரவேற்றார் முடிவில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி மோனிகா நன்றி கூறினார் விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு ஜெயசீலன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து
சிறு தானிய ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து

திருச்சி மாவட்ட 107 மையங்களிலிருந்து 32 அங்கன்வாடி பணியாளர்களும் ஆசிரியைகளும் 140 கல்லூரி மாணவர்களும் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசந்திரன், விஜயகுமார், திருமதி யசோதா அலுவலக பணியாளர் , அமலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் 20 க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவுகள் அதன் நன்மைகள் விளக்கும் வகையில் கண்காட்சி நடைபெற்றது மேலும் கலந்து கொண்டவர்களுக்கு சிறுதானிய உணவுகள் மற்றும் முருங்கை சூப் வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.