சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்டன் ஆளுநர் ஆர்.என்.ரவி 

0

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்டன் ஆளுநர் ஆர்.என்.ரவி

சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

2

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் லைட்டரை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் உற்பத்தியாளரிடம் பேசிய ஆளுநர் ரவி:

3

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டரின் வரிவிதிப்பை மத்திய அரசு அதிகரித்ததன் மூலம் லைட்டரின் பயன்பாடு குறைந்துள்ளது எனவும், அதன் மூலம் தீப்பெட்டி உற்பத்தியானது அதன் மூலம் 40 சதவீதத்தில் இருந்து 80 சதவீகிதமாக உயர்ந்துள்ளது எனவும், மீதமுள்ள 40 சதவீத லைட்டரின் பயன்பாட்டை குறைத்து அதிகப்படியான தீப்பெட்டி விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும் என தெரிவித்தார்

மேலும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் அவர்கள் இந்த தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் 80 சதவீத பெண்கள் பணிபுரிவது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது அதேபோல் நம் பாரத நாட்டில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மிகவும் பெருமையாக உள்ளது எனவும் ஆகையால் பெண்கள் தங்களது உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் பேணிக்காத்து பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.