திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் ஓமன் அல்முசன்னா பல்கலைக்கழகங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும்  ஓமன் அல்முசன்னா தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் ஆகிய இரு நிறுவனங்களுக்கிடையே 14.05.2025  அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்மெய்நிகர் வழி நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. மற்றும் யூடிஎஸ்ஏ கணினி மற்றும் தகவல் அறிவியல் கல்லூரித் தலைவர் திரு. கலீஃபா சயீத் சுவேத் சயீத் அல் பக்ரி ஆகியோர் கையெழுத்திட்டனர். செயின்ட் ஜோசப் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் தியாகராஜன், முனைவர் ஜூலியஸ் சீசர், முனைவர்  பிரவீன் மற்றும் யூடிஎஸ்ஏ  பேராசிரியர்கள் முனைவர் ஆசிம் தாபித் தாலிப் அல் மாமாரி, திருமதி. சஃபியா நாசர் சலீம் அல் ஜராடி, முனைவர் கூலா அலி சலே அல்சாடி மற்றும் முனைவர் குழந்தைவேல் மருதமுத்து பரமசிவம் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்..

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நிறுவனங்களுக்கும் நிறுவனச் சிறப்பிற்கான தரநிலைகளை உயர்த்துதல், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் அறிவார்ந்த நடவடிக்கைகளின் மூலம் புதுமையை ஊக்குவித்தல்,  பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இயங்கலைத் திட்டங்கள் மூலம் தொழில்முறை வளர்ச்சியை எளிதாக்குதல், நூலக சேகரிப்புகளைப் பகிர்வதன் மூலம் வளங்களை அதிகரித்தல் ஆகிய செயல்பாடுகளுக்கு வழிவகை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.