உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்தப்படும் கற்கள் !
தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சர்வே எண் 7/1, 7/5 ஆகிய இரண்டு இடத்தில் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் முறைகேடாக மண்ணை வெட்டி எடுத்தும், அதன் பின்னர் அளவுக்கு அதிகமான ஆழத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் வெடிவைத்தும் தினந்தோறும் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது.
தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதி பெறாமல் முறைகேடாக கற்களை வெட்டி எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறைகேடாக கற்களை வெட்டி எடுக்க தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தனியார் நிறுவனத்தின் சொத்துக்களில் இருந்து முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால் தனியார் நிறுவனத்தின் சொத்துக்களில் இருந்து தொடர்ந்து அளவுக்கு அதிகமான ஆழத்தில் தினந்தோறும் கற்கள் வெட்டி எடுத்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.
எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் நிறுவனம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
— ஜெய்ஸ்ரீராம்.