அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கரடுமுரடான வாழ்வை துணிவோடு கடந்த வந்த வைராக்கிய திருச்சி இளைஞனின் கதை !

திருச்சியில் அடகு நகையை விற்க

பெங்களுரில் உள்ள கார்மெண்ட்ஸ் ஏற்றுமதி நிறுவனம். தெற்காசியாவின் நம்பர் ஒன் நிறுவனமான 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றக் கூடிய ஷாஹி எக்ஸ்போர்ட்ஸில் பணியாற்றும் அன்பழகன், சென்னையில் உள்ள, கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழில் அனுபவம் கொண்ட அந்த இளைஞரை அழைத்து, “சென்னையில் புதிதாக ஒரு கார்மெண்ட் உற்பத்தி நிறுவனத்தை தொடங்க எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கான இடம் மற்றும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கு உதவ வேண்டும்” என வேண்டுகோள் விடுக்கிறார்.

நண்பன் அன்புவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, பெங்களுரிலிருந்து சென்னை வந்திறங்கிய ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளை காரில் அழைத்துக் கொண்டு, நிறுவனம் தொடங்குவதற்கான இடம் மற்றும் பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுககு வழிகாட்டுகிறார் அந்த இளைஞர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இனிகோ இருதயராஜ்
இனிகோ இருதயராஜ்

நிறுவனம் தொடங்குவதற்கான ஆய்வு பணிகள் முடிந்தது. என்றாலும், சில நிர்வாக காரணங்களால் அவர்கள் கார்மெண்ட் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணியை கைவிட்டு டெல்லி திரும்பினர். இரண்டொரு நாள் கழித்து அந்த துடிப்பான இளைஞனின் கன்சல்டிங் பணிக்காக ரூ.2 இலட்சத்திற்கான காசோலை, டெல்லியில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படுகிறது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

தனியார் நிறுவனத்தில் அன்றைய புதிய மாடல்களான டாடா சுமோ, குவாலிஸ் உள்ளிட்ட கார்களில் உயர்பொறுப்பில் வலம் வந்த அந்த இளைஞன், பின்னர் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பி கழுத்தில் கிடந்த தங்கச் செயினை அடகு வைத்து, பழைய மாருதி 800 காருடன் வலம் வந்த நேரத்தில் ரூ.2 இலட்சம் என்பது பெரிய தொகை தான். இருந்தாலும் ஒழுக்கம், கட்டுப்பாடு, நற்சிந்தனைகளை போதித்து வளர்த்த அவரின் தந்தையின் வளர்ப்பு, பணத்திற்காக அவரின் குணத்தை மாற்றிவிடவில்லை.

ரூ.2 இலட்சத்திற்கான காசோலை திரும்பியதை கண்டு ஆச்சரியம் கொள்கின்றனர் ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர்கள். ஏற்கனவே, சென்னையில் இன்முகத்துடன் கூடிய  அந்த இளைஞரின் அணுகுமுறை அவர்களை கவர்ந்துள்ளது. இப்போது நட்பிற்காக பணத்தை புறந்தள்ளிய குணம், அந்த இளைஞனுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கிறது. தங்கள் நிறுவனத்தில் உயர்பொறுப்பு அளித்து நல்ல சம்பளம் கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால், தான் சொந்தமாக தொடங்கிய நிறுவனத்தை விட்டுவிட்டு, சென்னை தாண்டுவதில்லை என உறுதியுடன் மறுத்துவிடுகிறார், அந்த இளைஞன். இறுதியில் ஓர் ஒப்பந்தம்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆடைகளை, சென்னையில் உள்ள ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்து, தயாரித்து வாங்கி, அவற்றின் தரம் பார்த்து, உரிய நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அதற்கு சேவைக் கட்டணமாக ஒரு சட்டைக்கு ரூ.2 என நிர்ணயிக்கப்படுகிறது.

1996..!

Master of Social Studies and Human Resources என்ற பட்ட மேற்படிப்பு படித்த அந்த இளைஞனுக்கு, “வேலை இல்லை” என கழுத்தை பிடித்து (நிஜமாகவே கழுத்தைப் பிடித்து..!) வெளியே தள்ளுகிறது சென்னை, சேத்பட்டில் உள்ள ஒரு நிறுவனம். வேலை இல்லை. நண்பர்களுடன் தங்கிய விடுதிக்கு, தன் பங்குக்கு கொடுக்க வேண்டிய வாடகை பணம் இல்லை. “என்னிடம் வாடகை பணம் கொடுக்க காசில்லை. தினமும் ஹோட்டலில் சாப்பிடும் உங்கள் 8 பேருக்கும் நானே சமைத்து தருகிறேன்” என இருக்கும் இடத்திலேயே ஒர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒரு வாய்ப்பை பெற்று, தன் நிலையை தக்க வைத்துக் கொண்டு, வேலை தேடும் படலத்தை தொய்வின்றி தொடர்கிறார், அந்த இளைஞர்.

1988..!

“திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்த போது கால்பந்து விளையாட்டில் ஆர்வம் செலுத்துகிறார், அந்த இளைஞன். ஆனால், கால்பந்து விளையாட SHOE கட்டாயம் என ஆசிரியர் காசி தெரிவித்துவிட, SHOE வாங்க கையில் பணம் இல்லாததால், SHOE-விற்காகவே என்.சி.சி.யில் சேர்கிறார். அப்போது புதுடெல்லியில் குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்பதற்கான தேர்வு நடைபெறுகிறது. 6 அடி உயரம் தாண்டி; 30 நிமிடம் ஓடி 6 கி.மீ. அடையும் தூரத்தை 18 நிமிடத்தில் ஓடி அசத்துகிறான் அந்த இளைஞன். பள்ளி அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் என வரிசையாக நடைபெற்ற அனைத்து முகாம்களிலும் அந்த இளைஞன் தேர்வாகிறான். இறுதிச்சுற்று டெல்லியில்! டெல்லி செல்வதற்கான ஆடைகளை எடுத்துச் செல்லத் தேவையான பெட்டியை கூட பக்கத்து வீட்டில் கடன் வாங்கித் தான் எடுத்துச் செல்கிறான், அந்த இளைஞன்.

ஆண்கள். பெண்கள் என அனைவரும் பங்கேற்கும் பரேடு பயிற்சி. ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து, யார் பனியனில் அதிக வியர்வை வழிகிறது என பாத்ரூம் மக்கில் பனியனை பிளிந்து அளவெடுத்து கொள்ளும் நண்பர்கள் வட்டம் அந்த இளைஞனுக்கு. முதல் ரவுண்டில் தேர்வாகிறான் அந்த இளைஞன். அடுத்து ரவுண்டு செல்ல SHOE வேண்டும். அந்த இளைஞனுக்கான SHOE நம்பர் 13. அந்த அளவு எங்கும் கிடைக்காமல், ஒரு மிலிட்டரி குடோன் சென்று பழைய 13ம் நம்பர் SHOE தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் SHOE ரொம்ப மோசமாக இருக்கிறது. இதனால் நம்மை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்த அந்த இளைஞன் இரவு முழுக்க அந்த SHOE-வை பாலீஸ் செய்கிறான். மறுநாள் நடைபெற்ற முகாமில் பங்கேற்று தேர்வும் ஆகிறான்.

இதில், அழகு என்னவெனில், SHOE பாலீஸ் செய்து சுத்தமாக வைத்திருந்ததற்காக அந்த இளைஞனுக்கு இந்தியன் மிலிட்டரி அகாடமி சார்பில் CHERRY BLOSSOM அவார்டு கிடைக்கிறது. அகில இந்திய மலையேறுதல் கேம்ப், அந்த இளைஞன் தலைமையில் ஒரு குழு சென்றது. மேப் ரீடிங் முறையில் மலையேறி, இலக்கை சரியாக அடைந்து திரும்புதல் பயிற்சியிலும் சாதனை புரிகிறான் அந்த இளைஞன். ஒரு இலக்கை அடைவதற்கு எத்தனை படிகள் உள்ளனவோ அத்தனை படிகளையும் கடந்து சென்ற அனுபவமும், பக்குவமும் என்.சி.சி. கற்றுக் கொடுத்ததால், “வேலை இல்லை” என கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய போது சோர்ந்து விடவில்லை” என்கிறார் அந்த இளைஞன்.

திருச்சியில், இளங்கலை படிப்பை முடித்த பின்னர், “சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் Master of Social Studies and Human Resource படிப்பில் சேர்கிறார், அந்த இளைஞர்.

1994.!

சென்னையில் நண்பன் பெலிக்ஸ் அறையில் தங்கி வேலை தேடுகிறான் அந்த இளைஞன்.  திருச்சியில் படித்த ஜோசப் கல்லூரியிலிருந்து முக்கொம்பு வரை ஓடிச் சென்று திரும்பும் ஓட்டப்பயிற்சியே, சென்னை, நுங்கம்பாக்கத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள அம்பத்தூருக்கு நடந்தே சென்று வேலை தேட வைத்தது, அந்த இளைஞனை. படித்தால் 5 Figure சம்பளம் என்றார்கள். ஆனால் 2 Figure சம்பளம் தரும் வேலை கூட அந்த இளைஞனுக்கு கிடைக்கவில்லை.

அந்த இளைஞனின் அப்பா ஸ்தனிஸ்லாஸ் பிள்ளை திருச்சி, செயிண்ட் ஜோசப் கல்லூரி தேவாலயத்தில் ஓர் உபதேசியர். கல்லூரியின் அறிவியல் சோதனை கூட பொறுப்பாளர். அவர் கற்றுக் கொடுத்த ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை என்.சி.சி.யில் நான் கற்றுக் கொண்ட பாடம் எல்லாம் அந்த இளைஞனை இந்த சமூகத்தில் சரியான வாழ்க்கை வாழ பண்படுத்தியது எனச் சொல்லலாம்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நெல்லை வாங்கி அவித்து மில்லில் அரைத்து அரிசியாக்கி அதைதான் அந்த குடும்பம் சேமித்து உண்பார்கள். அந்த அளவுக்கு சிக்கனம். கடன் வாங்க மாட்டார்.

அந்த இளைஞன் வேலை தேடி கஷ்டப்பட்ட காலத்தில், குடும்ப கஷ்டம் குறித்து ஒரு வார்த்தை கூட அப்பா எழுதும் கடிதத்தில் இருக்காது. பைபிள் வசனம், மேற்கோள்கள் தான் அந்த கடிதத்தில் இருக்கும். இன்றளவும் அந்த கடிதங்களை அந்த இளைஞன் பைபிளைப் போல, பைண்டு செய்து வைத்திருக்கிறார்.

அப்பாவின் கடிதமும், அருட்தந்தை ஜோசப் சேவியரின் தன்னம்பிக்கை வார்த்தைகளும் இல்லையென்றால், நான் இல்லை என்கிறார் அந்த இளைஞர்.

கல்லூரி காலத்தில் நடைபெற்ற INTERNSHIP பயிற்சிக்கென சென்னை, TI CYCLES நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவத்தில் கிடைத்த தொடர்பை கொண்டு அங்கு ஆலன் மேத்யு என்பவரை சந்தித்து வேலை தேடும் சூழலை விளக்கினான் அந்த இளைஞன். இதையடுத்து ரூ.2,000 சம்பளத்தில் அக்கம்பெனியில் CLERICAL வேலை போட்டு கொடுத்தார். இதைத் தொடர்ந்து I.S.E.X. என்ற ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் அடுத்து வேலை கிடைக்கிறது. அங்கு ரூ.2,500 சம்பளம். அங்கு பணியாற்றும் பணியாளர்களிடம் நேரம் தவறாமை, கட்டுப்பாடு, ஒழுக்கத்தை கடைபிடிக்க வலியுறுத்தினான் அந்த இளைஞன். இதனால் உற்பத்தி அதிகரித்தது. மாதத்தில் 30 நாளில் கொண்டு வந்த உற்பத்தி 20 நாட்களில் கிடைத்தது.

இதை அறிந்த அந்நிறுவனத்தின் எம்.டி. ரவி மல்ஹோத்ரா, தான் தொடங்க இருக்கும் புதிய நிறுவனத்தில் நிர்வாக பணியில்  அந்த இளைஞரை சேர பணித்தார். ஆலந்தூரில் உள்ள ஒரு நலிவடைந்த நிறுவனத்தை வாங்கி அதை சீர்படுத்தி உற்பத்தியை தொடங்கியது, அந்த இளைஞர் தலைமையிலான அணி. அங்கு வேலையில் அந்த இளைஞன் காட்டிய ஈடுபாடு, 6 மாதத்திற்கு ஒருமுறை சம்பள உயர்வை பெற்றுத் தந்தது. 1995இல், ரூ.2,500 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த அந்த இளைஞன், அடுத்த ஐந்தாண்டு காலத்தில் அதாவது 2000-த்தில் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறுகையில், அந்த இளைஞன் வாங்கிய சம்பளம் ரூ.78,000.

இந்நிலையில்,  TAIG  என்ற பெயரில் நால்வருடன் இணைந்து சொந்தமாக தொழில் தொடங்குகிறார், அந்த இளைஞர். அப்போது தான், தொழிலை தாண்டி அரசியலிலும்  கவனம் செலுத்துகிறார், அந்த இளைஞன். நிறுவனம் ஏராளமான கடனை சந்திக்கிறது. இதையடுத்து பார்ட்னர்கள் வெளியேற, நிறுவனத்தை முழு உரிமையாளராக கொண்டு துணிச்சலாக நடத்த முற்படுகிறார், அந்த இளைஞர்.

2007..!

அப்போது தான் பெங்களுர், ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அந்த இளைஞனின் அன்பு நண்பன், அன்பழகன் மூலம் அந்நிறுவனத்தின் நிர்வாகத்துடன் தொடர்பு ஏற்படுகிறது. 2 இலட்சத்துக்கான காசோலையை திருப்பி அனுப்பியதாக கட்டுரையின் முதல் பத்தியில் விவரித்தோமே, அதே நிறுவனம்தான். ஒரு சட்டைக்கு ரூ.2 சேவைக் கட்டணமுடன் கூடிய ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கிறது. ஒரே ஆண்டில் 16 இலட்சம் ஆடைகளை ஏற்றுமதி செய்து ரூ.32 இலட்சம் சம்பாதிக்கிறான், அந்த இளைஞன். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் Diesel, Fila, Gsus, Indian Blue Jeans, USpolo என 65-க்கும் மேற்பட்ட ப்ராண்டுகளில் சட்டை ஏற்றுமதி செய்யும் ஏற்றுமதியாளனாக உயர்கிறார் அந்த இளைஞன். 3 மாதத்திற்கு ஒருமுறை ஆர்டர்களை பெறுவதற்காகவே, வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினார் அந்த இளைஞர்.

இனிகோ இருதயராஜ்
இனிகோ இருதயராஜ்

ஆண்கள் பங்கேற்கும் பேஷன் ஷோ போட்டியின் மூலம் புதிது புதிதான ஆடை வடிவமைப்பு ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை ஏராளமாக தைத்து தருவதற்கான ஆர்டர்களை பெறுகிறார், அந்த இளைஞர். திருப்பூர் மற்றும் பெங்களுர் என விரிகிறது அந்த இளைஞனின் ஏற்றுமதிக்கான கிளைகள்.  நெருக்கடியான, பிசினஸ்க்கு மத்தியில் அரசியலில் கவனம் செலுத்தியிராவிட்டால், பங்களாதேஷ், மடகாஸ்கரிலும் கிளை அலுவலகம் திறந்திருப்பேன் என்கிறார், அந்த இளைஞர்.

ஏற்றுமதி வர்த்தகம், வேலைவாய்ப்பு, அந்நிய செலாவணி வரவு இவையெல்லாம் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பேருதவியாக அமையும். திருச்சியில் பிறந்து வளர்ந்த அந்த இளைஞன் இன்று பாகிஸ்தான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர உலக நாடுகள் அனைத்திற்கும் சென்று வர்த்தகம் செய்து வருகிறார், அந்த இளைஞன்.

அந்த இளைஞன், பள்ளி மாணவனாக இருந்த காலத்தில்  திருச்சி, மெயின் கார்டுகேட், போஸ்ட் ஆபிஸ் அருகில் உள்ள மைக்கேல் ஐஸ்க்ரீம் கடை, சில்வர் ஸ்டிரிங்ஸ் டெய்லர் கடைகளில் PART TIME வேலை செய்து பள்ளி கட்டணம் செலுத்தியதை நெகிழ்வோடு நினைவுகூர்கிறார். இன்று இந்தியாவிற்கு அந்நிய செலாவணி ஈட்டித் தரும் தொழிலதிபராக உயர்ந்து நிற்கிறார் அந்த இளைஞன்.  HYUNDAI நிறுவனத்தின் இரண்டாவது யூனிட் தொடங்கும் போது அதன் ஆலோசனை குழுவில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் அளவுக்கு அந்த இளைஞனின் தொழில்திறன் உயர்ந்து நிற்கிறது.

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் -
திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் –

சென்னையில், கல்லூரி ஹாஸ்டலில் தங்கிப் படித்த போது மெஸ்ஸில் சாப்பிட காசில்லாமல் வார்டனிடம் கெஞ்சி டைம் கேட்டு தாமதமாகவே பணம் கட்டிய அந்த இளைஞன், அதன் பாதிப்பால் இன்றளவும் அக்கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கான சாப்பாடு கட்டணத்தை செலுத்தி வருகிறார். அப்பா பெயரிலும், அண்ணன் பாதர் ஸ்டீபன் குழந்தைசாமி பெயரிலும் ஸ்காலர்ஷிப் வழங்கி வருகிறார்.

தன்னை வளர்த்து ஆளாக்கிய திருச்சியின் பொருளாதாரம் உயர்ந்திட, திருச்சி வாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்திட தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் அரசியலில் தடம்பதித்ததாக குறிப்பிடும் அந்த இளைஞன், வேறுயாருமல்ல ….!

தன் பெயரிலேயே இனிமையை கொண்டிருக்கும், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றிருப்பவருமான, இனிகோ இருதயராஜ்தான் அந்த இளைஞன்!

–  அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.