தம்பி, தொடை பத்திரம் ! பீதியை கிளப்பும் தெருநாய்கள் ! தமிழகத்தின் சாபக்கேடு !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தம்பி, தொடை பத்திரம் ! பீதியை கிளப்பும் தெருநாய்கள் ! தமிழகத்தின் சாபக்கேடு !

பத்து கொலை செஞ்ச ரவுடியே ரோட்டில் நடந்து போனாலும் தெருநாயைக் கண்டால் கொஞ்சம் ஜர்க் ஆகி விலகித்தான் செல்வான். அதுவும் இரவு பத்து மணிக்கு மேல் சொந்த தெருவில் கூட சுதந்திரமாக நடமுடியாத நிலை தமிழகத்தின் சாபக்கேடு. தெருநாய்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் இருக்கிறது என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தமிழ்நாட்டில் தெருநாய்கள் கடித்து கடந்த 2022 ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பு 2023 ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2021 முதல் 2022 வரை 155 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இந்த புள்ளி விவரங்களே போதுமானது, தெருநாய்களின் அட்ராசிட்டியை புரிந்துகொள்ள. மிக சமீபத்தில், ஆம்பூர் நகராட்சி வாத்திமனை கியூபா மசூதி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவனை, சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காயமுற்ற மாணவன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

3

ஆம்பூரில் கடந்த ஜனவரி-01, 2023 முதல் டிசம்பர்-18 2023 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 274 ஆண்கள், 109 பெண்கள், 15 ஆண் குழந்தைகள், 8 பெண் குழந்தைகள் என ஆக மொத்தம் 406 பேர் தெருநாய்க்கடியால் பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்றிருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கிறது ஆம்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகம்.

முகமது நவுமன்
முகமது நவுமன்
4

ஆம்பூரையடுத்த வாணியம்பாடியில் நகராட்சியின் 8-வது நகர்மன்ற உறுப்பினர் முகமது நவுமன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலிலிருந்து, வாணியம்பாடி நகராட்சியில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 1229 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆம்பூர், வாணியம்பாடி சம்பவங்களும் புள்ளிவிவரங்களும் பானை சோற்று ஒரு சோறு பதம் என்ற பழமொழியைப் போல எடுப்பான உதாரணங்களாக அமைந்திருக்கின்றன.

”அட ராமா இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலையே” என்ற கவுண்டமணியின் காமெடி வசனம்தான் வந்து தொலைக்கிறது. தமிழகத்தின் எந்த தெருவில் தடுமாறி தடுக்கி விழுந்தாலும் ஏதேனும் ஒரு தெருநாயின் மீதுதான் விழ வேண்டியிருக்கும் என்ற சூழல் அசாதாரணமானது. போர்க்கால அடிப்படையில் தனிச்சிறப்பான நடவடிக்கையைத்தான் எதிர்பார்க்கிறார்கள் பாமர மக்கள்!

– மணிகண்டன்

 

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.