நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் : காசோலையா? ஒப்பந்த பத்திரமா? எதுவாயினும் உஷாரய்யா … உஷாரு !

2

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் : காசோலையா? ஒப்பந்த பத்திரமா? எதுவாயினும் உஷாரய்யா … உஷாரு !

நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருங்கிணைந்து திருச்சியிலும், கம்பம் – தேனியிலும் தனிசங்கம் அமைத்திருக்கின்றனர் என்பதை அங்குசம் இணையத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறோம். ஆனாலும், பெயரில்லாத, முகவரியில்லாத மொட்டை கடுதாசிகளாக வெளிவந்த அறிவிப்புகளாகவே அவை இருந்தன.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கம்பம் – தேனியில் உருவான சங்கத்தினர் தொடர்பு எண் மட்டும் வழங்கியிருந்தனர். தற்போது, வெளிப்படையாக முகம் காட்ட துணிந்திருக்கின்றனர் அவர்கள்.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

இதுதொடர்பாக, நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், கம்பம் – தேனியைச் சேர்ந்த இளங்கோவன் கீழ்க்காணும் செய்திக்குறிப்பு ஒன்றை அங்குசம் இதழுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

3

”நியோமேக்ஸ் புகார்தாரர்களே வணக்கம். நியோமேக்ஸ் மீது புகார் கொடுத்தவர்கள் 7 சதவீதத்தினர் தான். அது தானாக சேர்ந்த கூட்டம். இந்த 7 சதவீதத்தினருக்கு தீர்வு கிடைக்காமல் அந்த 93 சதவீதத்தினரில் ஒருவருக்கு கூட தீர்வு கிடைக்காது என்பதுதான் நிதர்சனம். அந்த 93 சதவீதத்தினருக்கும் ஒட்டுமொத்தமாக தீர்வு கிடைத்துவிடாது. படிப்படியாகத்தான் தீர்வு கிடைக்கும். அதற்கிடையே நியோமேக்ஸ் நிறுவனத்தார் புகார் கொடுத்தவர்களுடன் சமரசம் பேச வரலாம்.

அப்போது புகார் கொடுத்தவர்கள் நியோமேக்ஸ் கொடுப்பதை வாங்கிக் கொண்டு செல்லும் ஏமாளியாக இருந்து விடக்கூடாது. முதலீடு வாங்கும்போது என்னென்ன வாக்குறுதி கொடுத்தார்களோ அவ்வளவையும் வாங்கிக் கொண்டு தான் சமரசம் பேச வேண்டும் cheque கொடுத்தால் cheque bounce case ல் அலையவைண்டும் agreement போட்டால் திரும்பவும் கோர்ட்டுக்கு போக வேண்டும். இது பற்றி எல்லாம் தீர்க்கமாக முடிவெடுக்க புகார் கொடுத்தவர்கள்‌ அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.

4

சிலர் வக்கீல் வைத்திருந்தாலும் பரவாயில்லை. அவ்வப்போது கருத்து பரிமாற்றம் செய்து ஒருமித்த முடிவெடுக்க வேண்டும். மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க ஏதுவாக புகார்தாரர் அனைவரும் கீழ்க்கண்ட வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பவும். தயவு செய்து போன் பண்ண வேண்டாம். attend பண்ண முடியாது. புகார்தாரரின் பெயர், வயது, வாட்ஸ் அப் நம்பர், ஊர், மாவட்டம் ஆகிய விபரங்களை மெசேஜ் ஆக அனுப்பவும்.

R.இளங்கோவன் M.Sc,M.Ed.PGDYN,
ஒருங்கிணைப்பாளர்,
நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டோர் சங்கம்
(புகார் கொடுத்தவர்களுக்கு மட்டும்)
கம்பம்-தேனி மாவட்டம்.
வாட்ஸ்அப் 6380588260 “
என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

Furry genius pet hospital

2 Comments
  1. Shahul says

    உனக்கு ஏன்டா த் எரியுது. உன் நிலையில் நீதமான நீதியில் நியோமெக்ஸின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியே தெரியுது

  2. பிரகாஷ் says

    இதுபோன்ற பொய்ச் செய்தி பரப்பி இழிநிலை வாழ்வு நடத்தும் இளங்கோவன் போன்றோரின் செய்திகளைப் பதிவிடும் கேடுகெட்ட அங்குசமே, இந்த பிழைப்புக்கு……….

Leave A Reply

Your email address will not be published.