நியோமேக்ஸ் : நீதிபதி தலைமையில் தனிக் கமிட்டி : மூன்று முக்கிய திருப்பங்கள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தங்களது பாண்டுகளை நியோமேக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளுமா? நிராகரித்துவிடுமா? என்ற பதட்டத்திற்கு ஆளாகியிருந்த நியோமேக்ஸ் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக, பாண்டுகளின் உண்மைத்தன்மையை ஒப்பிட்டு சரிபார்க்கும் பணிக்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்போவதாக உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

அக்-30 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், இதுவரையில் நடைபெற்ற நியோமேக்ஸ் ஏலத்தில் பங்கேற்று நீதிமன்றத்தின் ஏல நடவடிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது; இதுவரை புகார்களாக பெறப்பட்ட பாண்டுகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்து உறுதிபடுத்த தனி கமிட்டி அமைப்பது; மற்றும் தீர்வு திட்டத்திற்கு உதவும் வகையில் தனி சாஃப்ட்வேர் உருவாக்கம் ஆகிய மூன்று முக்கிய விவகாரங்கள் மீது தனிக்கவனம் செலுத்தியிருக்கிறது, உயர்நீதிமன்றம். இது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மூன்று சுற்று ஏல நடைமுறைகள் நிறைவடைந்து, நான்காம் சுற்று ஏலம் நடைமுறையில் இருந்துவரும் நிலையில், தொடர்ந்து பலமுறை எச்சரித்தும் ஏலத்தில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த முதலீட்டாளர்களில் 1040 பேர் இன்னும் எம்.எஸ்.டி.சி. நிறுவனத்துக்கான சேவைக் கட்டணத்தை செலுத்தாமல் இருக்கிறார்கள். இவர்களுக்கான கடைசி வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கறிஞரோடு ஆஜராக வேண்டுமென்றும்; பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும், இதுபோல ஏலத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

நீதிபதி பரதசக்ரவர்த்தி
நீதிபதி பரதசக்ரவர்த்தி

இதுவரை புகார் அளித்திருக்கும் 73,896 பேரின் 2,02,003 பாண்டுகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் நோக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி கமிட்டி அமைப்பது என்றும்; இந்த கமிட்டியில் EOW போலீசார், நியோமேக்ஸ் தரப்பு பிரதிநிதி ஒருவர்,  பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் தரப்பு பிரதிநிதி ஒருவர் கட்டாயம் இடம்பெறும் வகையிலும் வாய்ப்பை பொறுத்து வல்லுநர்களை இணைப்பது என்றும்; இதுபோன்று குறைந்தது மூன்று அதிகபட்சம் 5 கமிட்டிகளை அமைப்பது என்றும் தீர்மானித்திருக்கிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவர்கள், எந்தெந்த அம்சங்களை கருத்தில் கொண்டு பாண்டுகளை சரிபார்க்க ஏதுவாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். ஓட்டுச்சாவடி போல, அந்தந்த மாவட்டங்களில் புகார் சரிபார்ப்புக்கான முகாம்களை நடத்துவது என்றும் நீதின்றம் முடிவெடுத்திருக்கிறது.

மிக முக்கியமாக, புகார்களை சரிபார்ப்பது முதல் தீர்வு திட்டம் வரையில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் தனி சாஃப்ட்வேர் உருவாக்கம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம், அரசு தரப்பில், நியோமேக்ஸ் நிறுவனம் தரப்பில், தூத்துக்குடியை சேர்ந்த முதலீட்டாளர்கள் தரப்பில் என மூன்று சாஃப்ட்வேர்கள் தயார்நிலையில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் மூன்றில் ஒன்றை இறுதி செய்யும் கட்டத்தில் இருக்கிறது.

என்னதான், தனிக்கமிட்டி அமைத்து வாக்குச்சாவடி முறை போல, மாவட்டம் தோறும் புகார்தாரர்களை நேரில் வரவழைத்து புகார்களை சரிபார்க்கும் நடைமுறையை மேற்கொண்டாலும், 73,896 புகார்தாரர்களையும், அவர்களின் 2 இலட்சத்திற்கும் அதிகமான பாண்டுகளை சரிபார்ப்பது என்பது மிக மிக சவலான மிகவும் சிக்கலான பணியும்கூட. வாக்குச்சாவடி ஒன்றிற்கு சற்றேறக்குறைய 1000 வாக்காளர்களை கையாளும் வகையில்தான் தற்போதைய நடைமுறை இருந்து வருகிறது. இதுபோன்ற சிக்கல்கள் நிறைந்த விவகாரத்தை கையாளும்போது, அதே எண்ணிக்கையில் சரிபார்ப்பது இயலாத ஒன்று. அதைவிட இருமடங்கு நேரத்தையும் மனித உழைப்பையும் கோரும் விவகாரமாக இருந்துவருகிறது. இந்த சிக்கலான சூழலை கருத்திற்கொண்டு, புகார்களை சரிபார்க்கும் நடவடிக்கை தொடங்கும் முன்பாகவே சாஃப்ட்வேர் விவகாரம் குறித்து ஒரு முடிவெடுத்து, சாஃப்ட்வேர் துணையுன் சரிபார்ப்பு நடவடிக்கையை தொடங்கினால் மட்டுமே சில மாதங்களில் இந்த பணிகளை முடிக்க முடியும் என்பதாக சுட்டிக்காட்டுகிறார்கள். கருத்தில் கொள்ளுமா, நீதிமன்றம்?

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.