பாஜக அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து வீதி வீதியாக துண்டு பிரசுரம் !
பாஜக அரசின் ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வீதி வீதியாக துண்டு பிரசுரம் விநியோகம்
காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் எம் பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்தும் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்தும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
அந்த வகையில், இன்று நாடு முழுவதும் பாஜக அரசின் ஜனநாயக படுகொலை குறித்து பொதுமக்கள் சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றனர் .
சேலம் அம்மாபேட்டை பகுதியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசின் ஜனநாயக படுகொலையைப் பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்களை வீதி வீதியாக சென்று விநியோகம் செய்தனர் .
வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகளில் சென்ற பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை காங்கிரஸ் கட்சியினர் வழங்கினர் .
முன்னதாக சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து , சிலை முன்பு முதல் துண்டு பிரசுரங்களை வைத்தனர் .
தொடர்ந்து சேலம் மாவட்டம் முழுவதும் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் பணி அடுத்த கட்டமாக நடைபெற உள்ளது என்று மாவட்ட தலைவர் பாஸ்கர் தெரிவித்தார் .
– சோழன் தேவ்