கீழக்கரையில் தெருவுக்கு தெரு கள்ள மது விற்பனை கடும் ஜோர் !
கள்ளச்சாராயத்தால் மரணம் ஒருபுறம் கீழக்கரையில் தெருவுக்கு தெரு கள்ள மது ஒரு புறம் விற்பனை கடும் ஜோர்
விழுப்புரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் பலி எண்ணிக்கை 18 தாண்டி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கள்ள மது விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது உயிர்ப்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இருந்தன. அவற்றில் மது பிரியர்கள் மதுவை சாப்பிட்டுவிட்டு அரை நிர்வாணமாக ரோட்டில் கிடப்பது அந்த வழியாக செல்லும் மாணவிகள் பெண்களை கேலி செய்வது அசிங்கமாக சைகை செய்வது என இருந்தனர்.
இதனால் அந்த வழியில் செல்ல பெண்கள் தயங்கினர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் சமூக நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்தனர் அந்த கடைகளை அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வீரராகவராவ் இழுத்து மூட உத்தரவிட்டார்
இந்நிலையில் கீழக்கரையில் இருந்த டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டன பொதுமக்கள் மிகுந்த சந்தோசம் அடைந்தனர்
ஆனாலும் அதற்கடுத்ததாக 10 கிலோமீட்டர் தள்ளி உள்ள திருப்புல்லாணி ஏர்வாடி ஆகிய பகுதியில் இருந்து மதுவை வாங்கி வந்து தற்சமயம் தெருவுக்கு தெரு விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.
கீழக்கரை புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மீன் கடை பகலிலே மின்கடையாகவும் இரவிலே டாஸ்மாக் கடையாகவும் மாறி வருகிறது இது மட்டுமில்லாமல் கள்ள மது விற்பவர்கள் மது பிரியர்கள் இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது.
விலை அதிகமாக உள்ளது என இதனால் பலர் மண்டைகளும் உடைக்கப்பட்டு காவல் நிலையம் வரை சென்று இருவரையும் சமாதானம் செய்தும் அனுப்பி உள்ளனர்.
பெட்டிக்கடைகள் இருசக்கர வாகனங்கள் வைத்துள்ள இளைஞர்கள் தற்சமயம் மதுவை விற்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் போன் செய்தால் வீட்டிற்கு நேரடியாக கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்கின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கும் அரசுக்கும் பல்வேறு தரப்பினர் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை உயிர்பலி ஏதாவது ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை.
கீழக்கரை பகுதியில் நடைபெறும் கள்ள மது விற்பனையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனம் செலுத்தி கள்ள மது விற்பனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-பாலாஜி