சட்டவிரோத பால் கொள்முதல் நிலையங்களுக்கு ஆப்பு ! – அமைச்சர் மனோ தங்கராஜ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சட்டவிரோதமாக பால் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். – சேலத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.

”சட்ட விரோதமாக பால் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என சேலத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

தமிழக அமைச்சரவையில் சமீபத்தில் நிகழ்ந்த மாற்றங்களையடுத்து பால்வளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று கொண்ட மனோ தங்கராஜ் அவர்கள் சேலம் ஆவின் பால் பண்ணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

முதற்கட்டமாக பால் உற்பத்தியாளர்களுக்கு 5. 83 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஐஸ்கிரீம் வாகனத்தையும்; தொகுப்பு குளிரூட்டும் நிலையம் 1.50 கோடி மதிப்பிலும்; 12 – ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற ஆவின் ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

மேலும், பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்கள் 190 பேருக்கு தீவன விதைகள் 19 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டது. 2.65 கோடி மதிப்பில் தானியங்கி பால் சேகரிப்பு கருவியும் வழங்கிய அமைச்சர், உற்பத்தியாளர்களுக்கு போனஸ் மற்றும் ஈவுத்தொகை 27 இலட்சம் மதிப்பில் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டவிரோதமாக தனியார் பால் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் மக்கள் என அன்றாடம் பயன்படுத்தும் பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆவின் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பிரச்சனையும் பகுப்பாய்வு செய்து பிரச்சனைகள் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பால் உற்பத்தி இலக்கைப் பெருக்க உள்ளூர் வங்கிகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கறவை மாடுகள் வழங்க அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், 2 இலட்சம் கறவை மாடுகள் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். கறவை மாடுகளுக்கு காப்பீட்டு வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

அனைத்து பால் பண்ணைகளிலும் விவசாயிகள் எண்ணற்ற கோரிக்கைகளை வைத்துள்ளனர். படிப்படியாக அவர்களின் கோரிக்கை சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். தனியார் நிறுவனங்களில் பால் கொள்முதல் வருடம் முழுவதும் நடக்காது. ஆனால், ஆவின் நிறுவனத்தில் வருடம் முழுவதும் பால் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் நிறுவனங்களையும் ஆய்வு செய்த பின்பு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்பெறும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சேலம் ஆவின் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிக்கும் முயற்சி உள்ளது. கழிவுநீர் ஊருக்குள் புகாத வண்ணம் பிரச்சனை சரி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த பின்பு ஆவின் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆவின் நிர்வாக ஆணையர் மற்றும் மேலாண் இயக்குனர் மருத்துவர் சுப்பையன், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், ஆவின் சேலம் மேலாளர் விஜய் பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.ராஜேந்திரன், அருள் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

– சோழன் தேவ்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.