நிர்வாணமாக்கி தலை துண்டிக்கப்பட்டு ஆணவ படுகொலை – விருதுநகர் திக்…திக்.. ! …

0

விருதுநகர் மாவட்ட இளைஞர் நிர்வாணமாக்கி தலை துண்டிக்கப்பட்டு ஆணவ படுகொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் –  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் அம்மன் நகரை சேர்ந்த மாரிமுத்து, மாரியம்மாள், தம்பதியினரின் மகன் அழகேந்திரன் வயது 21 இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.

கொலை செய்யப்பட்ட அழகேந்திரன்
கொலை செய்யப்பட்ட அழகேந்திரன்

https://businesstrichy.com/the-royal-mahal/

இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார், இந்த விவகாரம் அந்த பெண்ணின் தாய் மாமா பிரபாகரனுக்கு தெரிய வரவே, பலமுறை இளைஞரை கண்டித்துள்ளார்.

சம்பவத்தன்று கடந்த ஜூன் 24 ஆம் தேதி இரவு அழகேந்திரன் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்த நிலையில் தான் அழகேந்திரன் வெகு நேரம் ஆகியும், வீடு திரும்பாததால் அவருடைய தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளனர். தொலைபேசி ஆப் செய்யப்பட்டதால், சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கள்ளிக்குடியில் இருக்கும் உறவினர்களிடம் தொலைபேசியில் தகவலை கேட்டுள்ளனர்.

அழகேந்திரனை, பிரபாகரன் தொலைபேசியில் அழைத்து அருகில் உள்ள பேருந்து நிலையத்துக்கு வருமாறு கூறி பிரபாகரனின் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்த பிரபாகரன்
கொலை செய்த பிரபாகரன்

ஏற்கனவே இருவருக்கும் பிரச்சனை இருப்பதால் தன் மகனை ஏதாவது செய்திருக்க கூடுமோ என்ற அச்சத்தில்,
ஜூன் 25 ஆம் தேதி அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், புகாரை வாங்க மறுத்து சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஜூன் 26 அதிகாலை 1 மணி அளவில் புகார் அளிக்க சென்றுள்ளனர், அவர்களை காலையில் வந்து புகார் அளிக்குமாறு காவல்துறையினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பின்னர் காலையில் காவல் நிலையத்திலிருந்து, இளைஞரின் பெற்றோருக்கு தொலைபேசியில் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி அங்கு உங்களுடைய மகன் கள்ளிக்குடி அருகே உள்ள கண்மாயில் நிர்வாணமாக தலை துண்டிக்கப்பட்டு நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தகவல் தெரிவித்து உடலை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனை அடுத்து இளைஞரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எனது மகனை ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளார்,

என்னுடைய மகன் காதலித்த பெண் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் நாங்கள் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் ஏற்கனவே பெண்ணின் உறவினர்கள் என்னுடைய மகனை சாதிய பாகுபாடு காரணமாக கண்டித்துள்ளனர்.

இதை மனதில் வைத்து தான் என்னுடைய மகனை ஆணவ படுகொலை செய்துள்ளார்கள் எனவே சிபிசிஐடி விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விடுதலைப் புலிகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமிழக விடுதலைப் புலிகள் கட்சி
தமிழக விடுதலைப் புலிகள் கட்சி

இதனை தொடர்ந்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் உறவினரான பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில், கொலை செய்யப்பட்ட இளைஞனும் என்னுடைய முறைப் பெண்ணும் காதலிப்பதை தெரிந்து பலமுறை இருவரையும் அழைத்து கண்டித்து உள்ளேன்.

ஆனால் அவர்கள் அதைக் கேட்காமல் மீண்டும் காதலித்து வந்ததால் ஆத்திரமடைந்த நான் அழகேந்திரன் என்னுடைய சொந்த ஊரான கள்ளிக்குடி பகுதியில் இருப்பதை அறிந்து அவனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய உறவினர் பெண்ணை காதலிப்பது தொடர்பாக சுமூகமாக பேசி முடிவெடுக்கலாம் வா என கூறி எனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அப்போது கள்ளிக்குடி அருகே உள்ள கண்மாயில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம்.

அப்போது உறவினர் பெண்ணை காதலிப்பது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோபத்தில் மது போதையில் அவனை நிர்வாணமாக்கி நான் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியால் அவனது தலை கை கால்களை துண்டித்து தனித்தனியாக வீசி கொலை செய்ததாக பகிர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கொலை செய்த பிரபாகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் குண்டர் சட்டத் திட்டத்தின் கீழ் சிறை சென்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது, இருப்பினும் இந்த கொலை தொடர்பாக வேறு யாரும் ஈடுபட்டு உள்ளார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

– மாரீஸ்வரன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.