முட்டுச்சந்தில் சிக்கித்தவிக்கும் நியோமேக்ஸ்!
குறைந்தபட்சம் ஏலச்சீட்டு நடத்துவதற்குக்கூட ஏகப் பட்ட விதிமுறைகள் கெடு பிடிகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது என்பதை அறியாத அரைவேக்காடுகள் அல்ல அவர்கள். பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலிப்ப தென்றால் செபியின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்பதையும் அவர்கள் அறியாதவர்கள் அல்ல. மாறாக, தங்களது குறுக்குப்புத்தியை பயன்படுத்தி, அரசின் விதிமுறைகளை எப்படியெல்லாம் மீறலாம்; எப்படியெல்லாம் பிராடுத்தனம் பன்னலாம் என்பதையெல்லாம் ரூம் போட்டு யோசிச்சிருப்பார்கள் போல!
முட்டுச்சந்தில் சிக்கித்தவிக்கும் நியோமேக்ஸ்!
யோமேக்ஸ் என்ற நிறுவனம் உருவாவதற்கு பிள்ளையார் சுழி போட்ட பத்மநாபன் ஆகட்டும்; தனது நிர்வாகத்திறமையால் முக்கியமாக வசீகரமான பேச்சுத்திறமையால் பலரையும் வளைத்துப்போட்ட பாலசுப்ரமணியன் ஆகட்டும், மற்றும் அதன் முன்னணி இயக்குநர் களாகட்டும் தலைமைப் பொறுப்பில் உள்ள பெரும்பாலோனோர் அரசு பொதுத்துறை நிறுவனமான, எல்.ஐ.சி. நிறுவனத்தில் பணியாற்றியவர்கள்; மேலாளர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருந்தவர்கள்; மெத்தப் படித்தவர்கள். குறைந்தபட்சம் ஏலச்சீட்டு நடத்துவதற்குக்கூட ஏகப் பட்ட விதிமுறைகள் கெடு பிடிகளை அரசு வகுத்து வைத்திருக்கிறது என்பதை அறியாத அரைவேக்காடுகள் அல்ல அவர்கள். பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூலிப்ப தென்றால் செபியின் அனுமதியை பெற்றாக வேண்டும் என்பதையும் அவர்கள் அறியாதவர்கள் அல்ல. மாறாக, தங்களது குறுக்குப்புத்தியை பயன்படுத்தி, அரசின் விதிமுறைகளை எப்படியெல்லாம் மீறலாம்; எப்படியெல்லாம் பிராடுத்தனம் பன்னலாம் என்பதையெல்லாம் ரூம் போட்டு யோசிச்சிருப்பார்கள் போல!
பணத்தை ரொக்கமாக பெற்றது; அவர்கள் நிலத்தில் முதலீடு செய்திருப்பதை போல போலியாக (நிலத்தை எழுதி கொடுக்கவில்லை) பெயருக்கு ரசீது கொடுத்தது; நூற்றுக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களை உருவாக்கியது; பினாமி பெயர் களில் சொத்துக்களை வாங்கிப் போட்டிருப்பது; அவ்வளவு ஏன் போலீசார் தங்களே தேடிய போதும்கூட கூகுள்மீட்டில் தங்களது வியாபாரத் தொடர் புகளை சிரமமின்றி தொடர்ந்து வரையிலான நிகழ்வுகளையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்பொழுது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்தவொரு சிக்கலும் இன்றி இவர்கள் இயங்கி வந்தது; வெளிநாடுகளிலும்கூட வசூல் வேட்டையை நடத்தி யிருப்பதை இவற்றையெல்லாம் தொடர்புபடுத்தி பார்க்கும் பொழுது, ‘பெரிய மனிதர்களின்’ ஆசி இல்லாமல், அவர்களது மறைமுகமான ஆதரவு இல்லாமல் இவையெதுவும் சாத்தியமில்லை என்றே என்ன தோன்றுகிறது.
இந்நிலையில், நியோமேக்ஸ் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி கும்பகோணத்தை சேர்ந்த கவுதமி என்பவர் தொடுத்த வழக்கில், ”இன்னும் ஒரு மாதத்தில் இயக்குநர்கள் அனைவரையும் கைது செய்து, அனைத்து சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்யாவிட்டால் வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும்” என கடுமை காட்டியிருக்கிறார், மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன். அதற்கேற்றாற்போல, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கமலக்கண்ணன் மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேலன் ஆகி யோரை ஒருநாள் போலீசு காவலில் வைத்து விசாரிக்க அனுமதியை பெற்றிருக்கிறார்கள், மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
இந்த போலீசு விசாரணையில், இவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கும் அந்த அதிகார மிக்கவர் கள் யார்? பினாமி பெயரில் எங்கெல்லாம் நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறார்கள்? யாருடைய ஆதரவில் ஓமன், கத்தர் போன்ற வெளிநாடுகளிலெல்லாம் கூட்டங்களை நடத்தினார்கள்? வெளிநாட்டில் உள்ள முதலீடுகள்? போன்ற பல கிடுக்கிப்பிடி கேள்விகளை போலீசார் கேட்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.
நியோமேக்ஸ் வழக்கில் முக்கிய திருப்பமாக, நீதிபதி தலைமையில் தனி ஆணையம் அமைக்க கோரிய மனு மீதான விசாரணையில், “மாநில அளவில் குழு அமைக்கலாம் என்றும் இவ்வாறு குழு அமைத்தாலும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வழக்கம் போல தங்கள் விசாரணையை தொடரலாம்” என கருத்து தெரிவித்திருக்கிறார், நீதிபதி நாகார்ஜூன். தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராவதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரத் தாழ்வாரங்களில் எப்படியும் பேசி காரியத்தை சாதித்துக்கொள்ளலாம் என்ற மிதப்பில்தான், இன்னும் தலைமறைவு நாடகத்தை தொடர்ந்து வருகின்றனர். முதலீட்டாளர்களின் அழுத்தமும்; விவகாரம் சந்திக்கு வந்துவிட்டது என்பதாலும், விசயத்தை ’நாலு சுவர்களுக்குள்’ முடிக்க முடியாமல் தடுமாறுகிறது, நியோமேக்ஸ்.
வீடியோ லிங்: