வாயால் கெட்ட தவளை : சீமான்

2

வாயால் கெட்ட தவளை : சீமான்

தமிழ் இலக்கியப் பழமொழிகளில் ஒன்று ‘நுணலும் தன் வாயால் கெடும்” என்பதாகும். தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தவளையாக இருந்து கெட்டப் பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்றால் மிகையில்லா உண்மையே. எல்லாப் பிரச்சனைகளைப் பற்றியும் பேசுவது, அவர் மனத்திற்குப்பட்ட தீர்வுகளை முன்வைப்பதும் பின் அவரே சிரித்துக்கொள்வதும், கட்சியின் தொண்டர்கள் கைதட்டி மகிழ்வதும் என்பது நாகரிக அரசியலாகத் தெரியவில்லை.

https://businesstrichy.com/the-royal-mahal/

சீமான் பேசும்போது,“நான் ஆட்சி அமைத்தால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கமாட்டேன். அதை இரத்து செய்வேன். ஏனெனில் என் ஆட்சியில் எல்லாருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும்போது எதற்கு இடஒதுக்கீடு?” என்று கூறியுள்ளார். சட்டமேதை என்று சீமான் அவர்களால் போற்றப்படுகின்ற அம்பேத்கர் ஒடுக்கப் பட்ட, உரிமை மறுக்கப் பட்ட மக்களுக்கு வழங்கப் பட்ட உரிமையை நான் ஆட்சிக்கு வந்தால் மறுப் பேன் என்பதன் மூலம் அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் குறித்துச் சீமான் எதையும் அறியவில்லை என்பது தெளிவாகின்றது. “நாம் தமிழர் கட்சி தமிழ்நிலத்தில் ஆட்சி அமைத்தால், உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்றவை இருக்காது. காரணம் நானே நல்லாட்சி தருவேன். எதற்கு உள்ளாட்சி” என்று உரையாற்றியுள்ளார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

ராஜீவ்காந்தி காலத்தில் கிராம உள்ளாட்சி அமைப்பு, நகர உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மக்களுக்கான நலத்திட்டங்களான சாலை வசதி, மருத்துவ வசதி, கல்வி வசதி, குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, சுகாதார வசதி போன்றவை உடனுக்குடன் நிறைவேற்றப்படும் வசதிகள் ஏற்படும். இந்த அடிப்படை உண்மைகளை அறியாமல் சீமான் நானே நல்லாட்சி தருவேன், எதற்கு உள்ளாட்சி என்பதில் அவரின் அறிவின் போதாமை தெரிகின்றது. “நாம் தமிழருக்கும் திமுகவுக்கும் இருப்பது பங்காளி சண்டை. தமிழர்களுக்கு எதிரான குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட துரோகக் கட்சி காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி உறவை முறித்துக்கொண்டால், நாம் தமிழர் வரும் தேர்தல்களில் போட்டியிடாமல் திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும்” என்பதற்கும் நாம் தமிழர் கட்சியினர் கைதட்டி மகிழ்ந்தார்கள் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது புரியவில்லை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதிமுக தேசியக் கட்சியான பாஜகவோடு கூட்டணியை முறித்துக்கொண்டால் அதிமுகவோடு நாம் தமிழர் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என்றதற்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஒன்றிய அரசுப் பொறுப்பில் பாஜக உள்ளது. தமிழகத்திற்கு உரிய தண்ணீரை ஒன்றிய அரசு பெற்றுத்தரவேண்டும். அப்படிப் பெற்றுத் தந்தால் நாம் தமிழர் கட்சி பாஜகவை ஆதரிக்கத் தயார்” என்று கூறியுள்ளார். கை நீட்டியவர்களிடம் தாவும் மழலைப் பிள்ளைபோல நாம் தமிழர் கட்சி உள்ளதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. “சீமான் என்னை மதுரையில் வைத்துத் திருமணம் செய்துகொண்டார். என்னோடு குடும்பம் நடத்தினார். இப்போது என்னை ஏமாற்றிவிட்டார்” என்று நடிகை விஜயலெட்சுமி 2012ல் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2023 கடந்த மாதத்தில் மீண்டும் நடிகை விஜயலெட்சுமி, வீரத்தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலெட்சுமியின் துணையோடு வளசரவாக்கத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகார் அடிப்படையில் சீமானைக் காவல்துறையில் விளக்கம் கொடுக்க நேரில் வரவேண்டும் என்று அழைப்பு கொடுத்தது. கடந்த 12ஆம் நாள் சீமான் காவல் நிலையத்திற்குத் தன் மனைவி கயல்விழியோடு சென்று 90 நிமிடங்கள் புகார்களுக்கு விளக்கம் கொடுத்தார். பின்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்,“என் மனைவி கயல்விழி, என் கழுத்தை நெறித்துக்கொண்டு, உன்னைச் சுற்றிக் கொள்ளை பொம்பளைங்க இருக்கும்போது போயும் போயும் இந்தப் பொம்பளைதான் (விஜயலெட்சுமிதான்) கிடைத்தாளா? என்று கேட்டாள்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இதை ஆமோதிப்பதுபோல் கயல்விழியும் சிரித்தார். சுற்றி நின்ற நாம் தமிழர் கட்சியினரும் சிரித்தனர். ‘இது ஆணாதிக்கத்தின் பேச்சு” என்று இந்து தமிழ் திசை நாளிதழில் எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். இஃது ஓர் அநாகரிகப் போக்கு என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். நடிகை விஜயலெட்சுமிக்கு உதவி செய்தார் வீரலெட்சுமி என்பதன் அடிப்படையில், சீமான் வீரலெட்சுமியை நாகரிகமற்ற முறையில் ஆபாசமாக விமர்சனம் செய்தார். வீரலெட்சுமியின் கணவர் பூவை கணேசன் சீமானைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “என் மனைவியுடன் மோதாதே…. என்னுடன் நேருக்கு நேர் மோதுகிறாயா?” என்று கேட்டுள்ளார் என்று வீரலெட்சுமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடனே சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது,“பூவை கணேசனுக்கு என் கையால் சாவு உறுதியாகி விட்டது. சண்டையை எங்கே எப்போது வைத்துக் கொள்ளலாம்” என்று வீரலெட்சுமிக்குச் சீமான் சவால் விடுத்தார்.

திருவள்ளுவர் வட்டத்தில் உள்ள கிராமம் தொட்டிகளைப் பஞ்சாயத்து திடலில் 2024ம் ஆண்டு காணும் பொங்கல் அன்று சீமான் என் கணவ ரோடு சண்டை போடவேண்டும் என்று நாள் குறித்து அறிவித்தார். “நான் புலி, பூனையோடு சண்டையிட மாட்டேன்” என்று செய்தி யாளர்களிடம் கூறினார். “சீமான் தன் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார்” என வீரலெட்சுமி ஊடகங்களில் தெரிவித்துள்ளார். சீமானின் பேச்சுகள் அர்த்தம் நிரம்பியதாக இல்லாமல் மனதில்பட்டதை நகைச்சுவையாகப் பேசி மேடை பேச்சுக்கான கூட்டத்தைச் சேர்த்து வருகிறார். இவரை நம்பிக் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். நம்பி வாக்களித்த மக்களுக்குத் தேவைப்படும் பேச்சுகளைப் பேசி அரசியல் களத்தை நாகரிகப்படுத்த முன்வரவேண்டும் என்ற வேண்டுகோள் சீமானின் செவிகளைச் சென்று சேருமா?

– ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

2 Comments
  1. டேய் இப்படி நீங்க அவர் மீது மக்கள் அவநம்பிக்கை கொள்ள வேண்டும் என்று இப்படி மயிர் போல் கதை எழுதினால் மட்டுமே அண்ணன் சீமான் அவர்கள் மக்களுக்கு அறியப்படுபவார், விரைவில் சீமான் தலைமையில் ஆட்சி அமையும்.‌…😠♥️🧡💪

  2. டேய் இப்படி நீங்க அவர் மீது மக்கள் அவநம்பிக்கை கொள்ள வேண்டும் என்று இப்படி மயிர் போல் கதை எழுதினால் மட்டுமே அண்ணன் சீமான் அவர்கள் மக்களுக்கு தெரியவருவார், விரைவில் சீமான் தலைமையில் ஆட்சி அமையும்.‌…😠♥️🧡💪

Leave A Reply

Your email address will not be published.