பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவா? போலீசார், விசாகா கமிட்டி விசாரணை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்ததையடுத்து, போலீசார் மற்றும் கல்லூரி விசாகா கமிட்டி விசாரணையை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 121 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர்.  பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 59 பேர் பணியாற்றி வருகின்றனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி
பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி

இந்த கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர்,  கார்மெண்ட் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இக்கல்லூரியில் கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில், முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிகள் மூன்று பேர் தங்களுக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட பிரின்ஸ்பால் பேபிலதா கல்லூரி பெண்கள் பாதுகாப்பு  கமிட்டியிடம் அந்த புகாரை கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிஇதனிடையே அந்த கமிட்டியினார் புகார் அளித்த மாணவிகளை அழைத்து விசாரித்தபோது அந்த மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் கவனத்துக்கு சென்றதை தொடர்ந்து போலீசார் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு மகளிர் பாலிடெக்னிக் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இது குறித்து கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் கேட்டபோது, ”புகார் வந்திருப்பது உண்மைதான்.  பெண்கள் பாதுகாப்பு கமிட்டி விசாரித்துக் கொண்டிருக்கிறது. விசாரணை அறிக்கை கிடைத்த பிறகுதான் எதையும் தெளிவாக சொல்ல முடியும்” என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவியை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

—   மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.