மனைவி பிரிவுக்கு காரணம் மாமியார் ! இரங்கல் போஸ்ட் போட்ட மருமகன் கைது !
தன் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்தாமல் பிரிந்ததற்கு காரணம், மாமியார்தான் என்ற ஆத்திரத்தில், அவர் உயிருடன் இருக்கும்போதே, அவருக்கு ” இரங்கல் தெரிவித்து” போஸ்ட் போட்ட மருமகனின் செய்கையால் திக்கு முக்காடி கிடக்கிறது, திருப்பத்தூர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டம் இலக்கிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த வினோதினி க்கும் , வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசனுக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர்.

குடும்ப சுமையை போக்க , நினைத்த வெங்கடேஷன் , மனைவி பெயரில் வங்கியில் கடன் பெற்று கறவை மாடு வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கான தவணை பணத்தை கட்டாததால். கணவன் வெங்கடேஷனோடு சண்டையிட்டு , வினோதினி தன் குழந்தைகளை அழைத்துகொண்டு தாய் வீட்டிற்கு சென்றவர் அங்கிருந்தபடியே , அருகில் இருக்கும் கடையில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் வேதனையில் இருந்த வெங்கடேஷன் கடந்த மாதம் மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று அழைத்து சமாதானம் பேச முயன்றுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியின் மண்டையை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாமியாரை பழிவாங்கும் நோக்கில் ” நேற்று முன்தினம் ‘ ஆழ்ந்த இரங்கல்’ என்ற தலைப்பில் “காணாத கண்ணிற்கு கரைந்து போன கற்பூரமே…! வாழ்நாளில் மறவாது வடிக்கிறேன் கண்ணீர், என , குறிப்பிட்டு , “டெம்ப்ளேட்” தயார் செய்து மனைவியின் உறவினர்களின் வாட்ஸ் அப் எண்கள் மற்றும் அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் வினோதினிக்கு போன் செய்து விவரத்தை கூற அதிர்ந்த போய் கணவரால் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆபத்து சூழந்துள்ளதாக கூறி கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய கந்திலி காவல் துறையினர் மனைவியின் மன்டையை உடைத்த வழக்கிலும் அவதூறு பரப்பிய வழக்கிலும் வெங்கடேசனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றார்கள்.
— மணிகண்டன்.