அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிறப்பு உதவி ஆய்வாளர் மூச்சு திணறி மரணம்!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாநகர தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி புரிந்து வந்தவர்  செல்வராஜ் (வயது 54) இவர் திருச்சி மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்நிலையில் நேற்று மாலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு  வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் இரவு அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆபத்தான நிலையில் செல்வராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கடந்த 1997 ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் கல்லணை அருகே கல்விகுடி கிராமம் ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி பீமநகரை சேர்ந்த வாலிபர் ஒருவரை மர்ம ஆசாமிகள் பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி சென்றனர். அப்பொழுது அந்த வாலிபர் திருச்சி மார்சிங்பேட்டை போலீஸ் குடியிருப்பில் உள்ள தற்போது இறந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்தார். அப்பொழுது அந்த வாலிபரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வீட்டுக்குள் வைத்து வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை நடந்த வீடு செல்வராஜ் வீடு என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூச்சுத் திணறி இறந்த சம்பவம் திருச்சி போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.