கன்னியாகுமரியில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு கோடை விடுமுறை சிறப்பு ரயில் …..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் சர்லபள்ளி – கன்னியாகுமரி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தென் மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சர்லபள்ளி, செகந்திராபாத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சர்லபள்ளி – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் (07230) சர்லபள்ளியிலிருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 07, 14, 21, 28, ஜூன் 04, 11, 18, 25 ஆகிய புதன் கிழமைகளில் இரவு 09.50 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கோடை சிறப்பு இரயில்
கோடை சிறப்பு இரயில்

மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – சர்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07229) கன்னியாகுமரியில் இருந்து ஏப்ரல் 04, 11, 18, 25, மே 02, 09, 16, 23, 30, ஜூன் 06, 13, 20, 27 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 05.15 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் காலை 11.40 மணிக்கு சர்லப்பள்ளி சென்று சேரும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்த ரயில்கள் நலகொண்டா,  மிரியால்குடா, நடிக்குடே, சட்டெனபள்ளி, குண்டூர், தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்இந்தரயில்களுக்கானபயணச்சீட்டு முன்பதிவு வெள்ளிக்கிழமை (மார்ச் 21) காலை 8 மணிக்கு துவங்கும் என அறிவித்துள்னர்.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.