அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சூப்பர் புயல் “Fung-Wong (உவான்)” பிலிப்பைன்ஸ் மீதான பேரழிவு….

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நவம்பர் 2025-இல் மேற்குப் பசிபிக் கடலில் உருவான ஒரு சக்திவாய்ந்த புயல், சில நாட்களில் சூப்பர் புயலாக மாறியது. இதற்கு “Fung-Wong” என்று பெயர் வைக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் வானிலை துறை (PAGASA) இதனை சூப்பர் டைஃபூன் என அறிவித்தது. காற்றின் வேகம் மணிக்கு 185 கிமீ வரை பதிவானது.

நவம்பர் 9, 2025  Fung-Wong புயல் லூசான் தீவில் உள்ள ஆரோறா மாகாணத்தில் கரையைக் கடந்து வந்தது. புயல் பரப்பளவு சுமார் 1,800 கிமீ எனும் அளவிற்கு மிகப் பெரிதாக இருந்தது . இது சமீபகாலங்களில் பதிவான மிகப்பெரிய புயல்களில் ஒன்று. பின்னர் அது தெற்கு சீனக் கடலுக்குள் நுழைந்து தைவான் நோக்கி நகர்ந்தது. முதல் மதிப்பீட்டின்படி 10 பேர் உயிரிழப்பு, 1.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு ஏற்பட்டது. சில செய்தி நிறுவனங்கள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18-ஐ கடந்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

சூப்பர் புயல் “Fung-Wong (உவான்)”
சூப்பர் புயல் “Fung-Wong (உவான்)”

புயல் வரும் முன்பே 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர் . கடலோரங்கள், மலையோரங்கள் வெறிச்சோடியன. பல மாகாணங்களில் மழை அளவு 100-200 மிமீ வரை பதிவானது. மலைச்சரிவுகள், பெரும் வெள்ளப்பெருக்கு, கடல் அலைகள் (storm surge) பல ஊர்களை மூழ்கடித்தன. Catanduanes, Ifugao, Mountain Province போன்ற மலைப்பகுதிகள் பெரும் சேதமடைந்தன.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

4,000-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்தன; சாலைகள் இடிந்து போனது; மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் இன்னும் “Kalmaegi” புயல் தாக்கத்திலிருந்து மீளவில்லை. அதற்கு சில நாட்களுக்குள் Fung-Wong வந்ததால் நிலம் ஏற்கனவே ஈரமாயிருந்தது . இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் அதிகரித்தது.

அதிகாரிகள் தெரிவித்ததாவது:

“இது வெறும் புயல் அல்ல இரட்டை பேரிடர்,” என்று பிலிப்பைன்ஸ் பேரிடர் மேலாண்மை அதிகாரி கூறினார்.

அரசு நடவடிக்கைகள் :

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அரசு தேசிய அவசரநிலை (State of Calamity) அறிவித்தது.

கடலோரப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

படை, கடல்படை, மீட்பு அணிகள் இணைந்து சாலைகள் சுத்தம் செய்து, சிக்கியவர்களை மீட்டன.

“Fung-Wong” காட்டியது ஆசிய பசிபிக் பிரதேசங்களில் புயல்கள் அதிக சக்தியுடனும், அடிக்கடி வருவதும் ஒரு புதிய நிலையாகி விட்டது. மழை, நிலச்சரிவு, கடல்சுழல், இவை அனைத்தும் ஒன்றாக மாறும்போது பல அடுக்குகளாக பேரிடர் அபாயம் உருவாகிறது.

அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்:

“இது ஒரு வானிலை நிகழ்வு அல்ல; காலநிலை மாற்றத்தின் நேரடி சாட்சியம்.”

தற்போதைய நிலை:

புயல் பிலிப்பைன்ஸை கடந்து சென்றாலும், வட லூசான் பகுதியில் இன்னும் கனமழையும் நிலச்சரிவும் நீடிக்கின்றன. புயல் தற்போது தைவான் நோக்கி நகர்கிறது; அங்கு ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

 —   மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.