மாணவர்களின் உயர்கல்விக்கும், எதிர்காலத்துக்கும் துணை நிற்போம் -உதயநிதி ஸ்டாலின்
திருச்சி மாவட்டம் கருங்குளம் அரசு மேனிலைப்பள்ளி மாணவி சத்யபிரியா சமீபத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.
அதே போல திருச்சி தேனேரிப்பட்டி அரசு மேனிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி சாலினி 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினார்.

தங்கை சத்யபிரியா கணிதத் தேர்வு எழுத செல்லும் போதும், தங்கை சாலினி கணினி அறிவியல் பொதுத் தேர்வுக்குச் செல்லும் நாளன்றும் அவர்களுடைய தந்தையாரை இழந்தனர்.
தந்தையை இழந்த சூழலிலும், இறுதி சடங்கை முடித்துவிட்டு, கல்வியே முக்கியமென்று நம் தங்கைகள் இருவரும் அன்றைய தினம் பொதுத்தேர்வை எழுதினர். நல்ல மதிப்பெண்களை எடுத்து தேர்வில் வென்றனர்.
அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் கேடயங்கள் மற்றும் கல்வி நிதி உதவியை திருச்சியில் இன்று நேரில் வழங்கினோம்.
அவர்களின் உயர்கல்விக்கும் – எதிர்காலத்துக்கும் துணை நிற்போம் என்று அவர்களை வாழ்த்தினோம்.
— உதயநிதி ஸ்டாலின்.