என்னுடைய மூவ் தனியாகதான் இருக்கும்! Surprise-ஆக எல்லாமே நடக்கும்! – சசிகலா பேட்டி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜையை முன்னிட்டு பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின்பு மதுரை திரும்பிய வி.கே.சசிகலா அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். நான் என்ன செய்கிறேன் என பொறுத்திருந்து பாருங்கள் அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன். யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன் எத்தனை பேரை கட்சியில் இருந்து நீக்க முடியும். எம்.ஜி.ஆரின் மறைவில் இருந்து கட்சியை பார்த்து வருகிறேன். பழைய நிலை அதிமுகவில் திரும்பும்.
 2வது முறை ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரிசெய்வேன் யாரு துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். அதிமுகவை பொறுத்தவரை இது 2வது முறை நடக்கும் பிரச்சனை மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும் பொறுமையாக இருங்கள். ஜெயலலிதாவை திட்டியவர்களை கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கி உள்ளோம் என்னுடைய மூவ் தனியாகதான் இருக்கும் ஆனால் அது தனியாக தெரியும் என்றார்.

— ஷாகுல் படங்கள் :ஆனந்தன்
 
Comments are closed, but trackbacks and pingbacks are open.