ஸ்வீட்டி, நாட்டி, கிரேஸி! இனியா சொன்ன இனிப்புச் சேதி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ருண் விஷுவல்ஸ்’என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி.எம். ஆர்.ரமேஷ், ஆர் .அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஜி .ராஜசேகர்  இயக்கத்தில் ஹீரோவாக த்ரிகுன் ஹீரோயின்களாக  ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ் காமெடி படம்,  ஸ்வீட்டி நாட்டி கிரேஸி.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில்  விரைவில் வெளிவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அக்டோபர் 05- ஆம் தேதி இரவு சென்னையில் நடந்தது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ஸ்வீட்டி நாட்டி கிரேஸி திரைப்படம்
ஸ்வீட்டி நாட்டி கிரேஸி திரைப்படம்

இயக்குநர் ராஜசேகர்

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

“தயாரிப்பாளர்கள் ரமேஷ், அருண் ஆகியோரிடம் நான் கதை சொல்லப் போன போது, இளைஞர்கள் ரசிக்கும் கதை கேட்டார்கள். இந்த கதை சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டார்கள். ஹீரோத்ரிகுன்னுக்கும் கதை பிடித்திருந்தது. ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா,  சுந்தரா டிராவல்ஸ் ராதா   என ஒரு நல்ல  குழு கிடைத்துள்ளது. இந்தக் கால ரசிகர்கள் எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு அருமையான படமாக இப்படம் இருக்கும். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும்,  அனைவருக்கும் நன்றி”.

இசையமைப்பாளர் அருணகிரி

‘இயக்குநர் ராஜசேகருக்கு என் நன்றி. படத்தில் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்”.

ஒளிப்பதிவாளர் சி. விஜய ஸ்ரீ

“சென்னை ஃபிலிம் இண்ஸ்டியூட்டில் படித்த பெண் நான். ஹைதராபாத் , மும்பை என போய்விட்டு மீண்டும் இங்கு வந்தது  மகிழ்ச்சி. இயக்குநர் ராஜசேகர் மிக அருமையாகப் படத்தை எடுத்து வருகிறார். தயாரிப்பாளர்கள் மிக உறுதுணையாக இருக்கிறார்கள். படம் கிட்டதட்ட முடிந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கும். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும்”

சுந்தரா டிராவல்ஸ் ராதா

“என்னுடன் நடித்த  இரண்டு கதாநாயகிகளும் எனக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்தார்கள். என் முதல் படத் தயாரிப்பாளர் தங்கராஜ் சார் தான்,  இங்கு நான் நிற்க காரணம். சுந்தரா டிராவல்ஸ் படம் போல இந்தப்படமும் காமெடியாக இருக்கும். ஹியூமரை இப்போது நாம் நிறைய மிஸ் செய்கிறோம், அதை இந்தப்படம் ஃபில் பண்ணும். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்”.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடன இயக்குநர் ராதிகா

“இப்படத்தின்  இறுதிக்கட்டத்தில் தான் நான் இணைந்தேன். ராஜசேகர் சாருடன் முன்னர் வேலை பார்த்திருக்கிறேன். அதை ஞாபகம் வைத்து என்னை அழைத்ததற்கு நன்றி. இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளேன்.மிக அழகாக வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் விஜய ஸ்ரீ மேடம் என் வேலையைப் பாதியாக்கிவிட்டார். உங்கள் எல்லோரது ஆதரவையும் தாருங்கள்”.

ஸ்ரீ ஜீத்தா கோஷ்

“தமிழ் சினிமாவுக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய வரவேற்பையும் வாய்ப்பையும் தரும் என்று நம்புகிறேன்.நீங்கள் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும். இதில் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது”.

நடிகை இனியா

“இந்தப்படம் எனக்கு ஸ்பெஷல் மூவி.  நான் நடித்த மூன்று  படங்கள் இந்த வாரம் வெளிவந்துள்ளது. தொடர்ந்து நல்ல விசயங்கள் நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் நந்தினி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன், நல்ல பாத்திரம். மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளோம்.இதில்  ஸ்வீட்டி நாட்டி கிரேஸி யார் யார் என படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  ராஜசேகருக்கு ஃபர்ஸ்ட் படம், செம்ம ஃபன்னாக படத்தை எடுத்துள்ளார். எல்லோருக்கும் பிடிக்கும்படி கலகலப்பாக இருக்கும்”.

நடிகை இனியா

நாயகன் த்ரிகுன் “எனக்கு ஊர் கோயம்புத்தூர் தான். ஜர்னலிசம் படிச்சேன், பிரகாஷ் ராஜ் கண்ணில் பட்டு, இனிது இனிது படம் செய்தேன். காலேஜ் படிக்கும் போதே ஹீரோ ஆகிவிட்டேன். சமீபத்தில் மிஷ்கின் சார் இசையமைத்த டெவில் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் தெலுங்கில் பல படங்கள் செய்திருந்தாலும் இங்கு பார்ப்பவர்கள் என்ன படம் செய்துள்ளாய் எனக் கேட்கும் போது, வருத்தமாக இருக்கும். அதனால் தமிழில் படம் செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த நேரத்தில் தான் ராஜசேகர் சார் இந்தக் கதையைச் சொன்னார். இப்போது சினிமாவில்  ஒன்று அழ வைக்க வேண்டும், இல்லை சிரிக்க வைக்க வேண்டும். நான் சீரியஸ் படங்கள் தான் செய்து வருகிறேன், அதனால் கண்டிப்பாக இந்தப்படம் செய்யலாம் என சொன்னேன். ராஜசேகர் சார் மிக கடினமான உழைப்பாளி. இப்படம் கண்டிப்பாகப் பேசப்படும் படமாக இருக்கும். எங்கள் படத்தில் மூன்று கதாநாயகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஜாலியான படமாக இருக்கும்”.

தயாரிப்பாளர் அருண்

“நானும் நண்பர் ரமேஷும் அருண் ஈவண்ட்ஸ் சார்பில், நிறைய ஈவண்ட்ஸ் நடத்தியுள்ளோம். ஒரு நாள் என் நண்பர் ரமேஷ் நாம் ஏன் ஒரு நல்ல கமர்ஷியல் படம் செய்யக்கூடாது எனக் கேட்டார். உடனே சரி சார் என்றேன். அப்போது தான் உளவுத்துறை படத்தின் இயக்குநர் ரமேஷ் செல்வன் வந்து, என் உதவி இயக்குநர் நல்ல கதை வைத்துள்ளார் என்றார், அவர் மனது எனக்குப் பிடித்திருந்தது. அவரே இந்தப்படத்தைச் செய்திருக்கலாம் ஆனால் அவர் துணை இயக்குநருக்கு வாய்ப்பு கேட்டார். இந்த காலத்திற்கு உள்ளத்தை அள்ளித்தா படம் போல வேண்டும் என்றோம். அட்டகாசமான படமாகத் தந்துள்ளார்கள். சிரித்து சிரித்து கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும். மூன்று கதாநாயகிகள் இருந்தாலும் மூவருக்குமிடையே கொஞ்சம் கூட ஈகோவே இல்லை.  எங்க ஹீரோ அற்புதமானவர். இளைஞர்களுக்கான செம்ம ஜாலியான படம்.  எப்போதும் எங்களுக்குத் துணையாக இருக்கும் பத்திரிகையாளர்கள் இப்படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.